தருமபுரி இளவரசன் மர்ம மரணம்: ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணை அறிக்கை தாக்கல்

சென்னை:

மிழகத்தில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி  தருமபுரியை சேர்ந்த இளவரசன் மர்ம மரணம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த விசாரணை கமிஷன் தனது விசாரணை அறிக்கையை இன்று முதல்வர் எடப்பாடியிடம் தாக்கல் செய்தது.

தருமபுரியைச் சேர்ந்த காதல் ஜோடிகளான இளவரசன் திவ்யா 2012ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு இளவரசன் மர்மமான முறையில்  ரெயில்வே தண்ட வாளத்தில் இறந்து கிடந்தார். இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இரு தரப்பினரிடையே கலவரம் மூண்டது.

இந்த நிலையில், இளவரசன் மர்ம மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைத்த அரசு, அதற்கு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலனை நியமனம் செய்தது. விசாரணை ஆணையம் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடத்திய நிலையில், இன்று விசாரணை ஆணையத்தன் அறிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தாக்கல் செய்தது.