ஷனம் ஷெட்டியை பிரிந்ததற்கு காரணம் சொல்லும் தர்ஷன்….!

தமிழ்,தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஷனம் ஷெட்டி..

ஷனம் ஷெட்டியுடன் மாடலிங் படப்பிடிப்புகளின் போது பிக் பாஸ் புகழ் தர்ஷன் நெருக்கமாகியுள்ளார்.

இருவரும் திருமணம் செய்வது பிக்பாஸ் நிகழ்ச்சியால் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து பல மாதங்கள் ஆகியும் தர்ஷன் திருமணத்துக்கு மறுப்பதாக தெரிவித்து ஷனம் ஷெட்டி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

வெளிநாட்டில் ஷூட்டிங் சம்மந்தமாக செல்வதற்கு ரூ.15 லட்சம் வரை நான் செலவழித்தேன். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷனுக்கு வாய்ப்பு கிடைக்கவும் பலவகைகளில் உதவி புரிந்தேன்.

தர்ஷனின் நண்பர் மற்றும் தர்ஷன் இணைந்து என்னை மிரட்டுகிறார்கள். என்னைப்பற்றி பொய்யான கருத்துகளை தர்ஷன் பரப்பி வருகிறார். எனவே தர்ஷன் மீது நம்பிக்கை மோசடி,கொலை மிரட்டல் உட்பட வழக்குகளின் கீழ் புகார் கொடுத்துள்ளேன், இந்தப் புகார் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது” என கூறியுள்ளார் .

இதற்கு செய்தியாளர்களை சந்தித்த தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு எனக்குப் பல பெண்களிடம் தொடர்பு இருக்கிறது என்று ஷனம் கூறியுள்ளார். அதற்கான ஆதாரம் இருந்தால் அவரைக் கொடுக்கச் சொல்லுங்கள். ஷனம் ஒரு நிகழ்ச்சியில் எங்களுக்கு இடையே ஷெரின்தான் தடையாக இருக்கிறார் என்று அவர் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். அது உண்மை அல்ல. நானும் ஷெரினும் நல்ல நண்பர்கள் மட்டும்தான்.

மேலும், நான் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக ஷனம் கூறியுள்ளார். அதுவும் உண்மையல்ல. இவ்வளவு நடந்த பிறகு அவரைத் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. எனக்கு அவர் நிறைய உதவிகள் செய்து இருப்பதால், அவர் மீது நான் எந்த வழக்கும் தொடர மாட்டேன். அவர் கொடுத்த வழக்கில் ஆணையர் கேட்டபின் என்னிடம் உள்ள ஆதாரங்களைச் சமர்ப்பிப்பேன்” என இதற்கு தர்ஷன் விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தனது காதல் பிரிவு குறித்து முதன் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் தர்ஷன். அதில் அவர், “சில உறவுகள் தோல்வியடையும். அதற்கு என்ன காரணமாக இருந்தாலும் அது இரண்டு பேருக்கு நடுவில் இருக்கும் விஷயம். ஒருவரோ அல்லது இருவருமே மகிழ்ச்சியாக இல்லை என்றால் விஷயங்கள் இன்னும் சிக்கலாவதற்குள் சுமுகமாகப் பிரிவதுதான் சரியான முடிவாக இருக்கும்.

மகிழ்ச்சியில்லாத உறவில் என்ன காரணத்துக்காக இருந்தாலும் அது சரியல்ல. நான் இந்த நபரின் மீது பெரும் மரியாதை வைத்திருந்தேன். ஆனால் எங்களுக்கிடையே விஷயங்கள் ஆரோக்கியமாக இல்லை, அவர்களால் அந்த யதார்த்தத்தை ஏற்க முடியாமல் என்னை வேண்டுமென்றே ஒழித்துக் கட்ட முனைந்துள்ளார். எந்த குற்றச்சாட்டிலும் உண்மையில்லை. உண்மை தெரியாதவர்களும், ஊடகங்களும் எனது குணத்தை விசாரிக்கின்றனர்.

இதனால் நான் காயப்பட்டேன். இந்த காரணத்தால் தான் சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருந்தேன். வாழ்க்கையில் பின்னடைவுகள் இருக்கும். ஆனால் அதிலிருந்து நான் கற்றிருக்கிறேன். எனது எதிர்காலத்தின் மீதும், தொழில் வாழ்க்கை மீதும் முன்னை விட அதிக கவனம் செலுத்தி வருகிறேன். என்ன நடந்தாலும் என் பக்கம் நின்ற அனைவருக்கும் மிக்க நன்றி. அவர்களுக்கு நான் என்றும் கடன் பட்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் தர்ஷன்.