திலீபன் மகேந்திரன்.. புள்ளிராஜா! பண மோசடி! : “பேஸ்புக்” தமிழச்சி

ரவுண்ட்ஸ்பாய்:

download-3

துப்பறியும் நிபுணர்களான பேஸ்புக் தமிழச்சி, பேஸ்புக் திலீபன் மகேந்திரன் ரெணடு பேருக்கும் இடையில நடக்குற பஞ்சாயத்து எப்ப முடியுமோ தெரியல. வழக்கம்போல இன்னிக்கு ஒரு புது குண்டை வீசியிருக்காங்க, தமிழச்சி மேடம்!

“திலீபன் மகேந்திரனால் பாதிக்கப்பட்ட 3 பெண்கள் என்னிடம் தொடர்பு கொண்டு திலீபனை குறித்து எழுதும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்கவே இப்பதிவு எழுதப்படுகிறது” அப்படிங்கிற முன்னுரையோட அவங்க எழுதியிருக்கிற பதிவு இதுதான்:

“கருப்பு முருகானந்தத்தின் கைக் கூலியாக மாறிப் போன புள்ளி ராஜா திலீபன் மகேந்திரன் பல பெண்களோடு தொடர்பில் இருந்ததும் இல்லாமல்,

பேஸ்புக் சாட் மூலமாக பல பெண்களை வளைத்துப் போட்டு அவர்களிடம் பணம் பறிப்பது, படுத்துவிட்டு செல்லும் பெண்களை மிரட்டுவது, அடிப்பது உள்ளீட்ட பொறுக்கித்தனங்கள் செய்வதோடு,

திலீபன் மகேந்திரன் - தமிழச்சி
திலீபன் மகேந்திரன் – தமிழச்சி

“சமூகப் பிரச்சனை பேசுகிறேன், எனக்கு பணம் கொடுத்து உதவுங்கள்” என்று பேசி பலரிடம் பணம் மோசடியிலும் ஈடுபட்டுள்ளார்.

“நான் கூறுவது அனைத்தும் பொய், ஆதாரம் காட்டு” என்று திமீராக பேசியதோடு மிக இழிவான அநாகரிகமான வார்த்தைகளால் தெருப் பொறுக்கிகளுக்கு இணையான வார்த்தைகளை வெளிப்படுத்தி உள்ளார்.

புள்ளிராஜா திலீபன் மகேந்திரன் கருப்பு முருகானந்தத்தின் கைக்கூலியாக மாறிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.

புள்ளிராஜா திலீபன் மகேந்திரன், “எந்த பெண்ணையும் அடிக்கவில்லை. பெண் உடலை வன்முறைக்கு உட்படுத்தவில்லை. பெண்களை போகப் பொருளாக உபயோகிக்கவில்லை, அவர்களை அச்சுறுத்தவில்லை என்று மறுப்பு தெரிவிக்கும் போது பாதிக்கப்பட்ட பெண் பேசிய ஆடியோ வெளியிடப்படும்” அப்படின்னு எழுதியிருக்காங்க தமிழச்சி.

ஹூம்..  எனக்கென்னவோ, இந்த ரெண்டு பேருக்கும் கவுன்சிலிங் கொடுக்கணும்னு தோணுது!

ஆங்… இதெல்லாம் ஒரு நியூஸூன்னு படிச்சு எழுதறேனே.. எனக்கும்கூட கவுன்சிலங் தேவைதான்போல!