சென்னை,

 ஜெயலலிதா மரணத்த வைத்து திவாகரன், தினகரன்  மலிவான அரசியல் செய்து வருகிறார்கள் என்றும், அவர்களை கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

செனனை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், ஜெ. மரணம் குறித்து திவாகரன் பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அமைச்சர்  கூறியதாவது,

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிக்கும் நிலையில் டி.டி.வி. தினகரனும், திவாகரனும் தங்களது இஷ்டப்படி செயல்பட்டு வருகிறார்கள், அவர்கள் இருவர் மீதும் விசாரணை ஆணையம் தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து,  கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். விசாரணை கமிஷன் விசாரித்தால் மேலும் உண்மைகள் வெளிவரலாம் என்றார்.

மேலும், ஓகி புயல் காரணமாக மாயமான மீனவர்கள் குறித்த கேள்விக்கு,  `ஒகி புயலால் காணமல்போன மீனவர்கள் திரும்பாவிட்டால், நிவாரணம் வழங்க வேண்டுமென்று மீனவர்கள் கோரி வருகின்றனர்.

காணாமல்போன மீனவர்கள்பற்றி மனு அளித்தால் அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படும் என்றும், மீனவர்களை தேடும் பணி இன்னமும் நடைபெற்று வருகிறது. அவர்கள் 200 நாட்டிகல் மைல் தொலைவுக்கு சென்றுள்ளதால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறினார். ஜனவரி முதல் வாரத்தில்கூட மாலத்தீவு பகுதிகளில் மீனவர்களைத் தேடினோம் என்றார்.

மேலும், ஒகி புயலால் இறந்த மீனவர்களின் எண்ணிக்கை 25 ஆகும்.  காணாமல்போன மீனவர்கள் 15 நாட்களுக்குள் திரும்பாவிட்டால் உயிரிழந்தவர்களாக கருதப்படுவர் என்ற அமைச்சர்.   ஒகி புயலால் காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கை 194 பேர் என்று கூறினார்.

ரஜினி கமல் அரசியல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,  ரஜினி அரசியல் ஆன்மீகப்பயணம். கமல் அரசியல் பகுத்தறிவுப் பயணம் என்றும்,  யார் எதை நோக்கி பயணித்தாலும், எங்களின் பயணம் மக்களை நோக்கியே உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.