சுஷாந்த் சிங் தற்கொலையால் பாலிவுட் அதிர்ச்சி.. காதலியுடன் சுற்றும் படங்கள் நெட்டில் வலம்..

--

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று காலை மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 34 வயதே ஆன இளம் நடிகர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என்ன பாதிப்பு இருந்தது என்பது பற்றி மும்பை பாந்தரா போலீசார் விசாரிக்கத் தொடங்கி உள்ளனர். அவரது வீட்டுக்கு போலீஸார் சென்று சுஷாந்த் தற்கொலைக்கு காரணம் பற்றி ஏதாவது கடிதம் எழுதி வைத்திருக்கிறாரா என்று தேடினார். ஆனால் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். ஒரு சில மருந்து சீட்டுகள் மட்டும் கிடைத்திருக்கிறது. எனவே உடல் நல குறைவாக இருந்திருக் கலாம் என்று கருதப்படுகிறது.
முன்னதாக சுஷாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தாயாரின் படத்தை வெளி யிட்டு உருக்கமான பதிவை வெளியிட்டிருந் தார். கடந்த சில தங்களுக்கு முன்பு சுஷாந் திடம் மேனேராக பணிபுரிந்த திஷா சலைன் என்பவர் தனது குடியிருப்பில் 14 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். அதற்கு சுஷாந்த் அதிர்ச்சி தெரிவித்திருந்தார். அடுத்த சில நாட்களில் சுஷாந்த தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளித்திருக்கிறது.
சுஷாந்த் ரெய்ஹியா சக்ரவர்த்தி என்ற கேர்ள்பிரண்டுடன் நெருக்கமாக பழகி வந்தார், இருவரும் பல இடங்களுக்கு ரகசியாமாக சுற்றி வந்தனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணைய தளத்தில் பரவி வருகிறது.
பாட்னாவில் பிறந்த சுஷாந்த் நடிப்பதற்காக மும்பை வந்து தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார். இவரது தங்கை மித்து சிங் மாநில அளவிலான கிரிக்கெட் வீரர் ஆவார்.
சுஷாந்த் மரணம் குறித்து தெரிவித்துள்ள நடிகர் அக்‌ஷய் குமார்.’இது உண்மையிலேயே என்னை அதிர்ச்சியிலும் பேச்சில்லாமலும் செய்திருக்கிறது. அவர் நடித்த சிச்சோர் படத்தை பார்த்து அந்த பட தயாரிப்பாளரிடம் சுஷாந்த் நடிப்பு பற்றறி பாராட்டினேன். அவரைப் போன்ற திறமையான நடிகருடன் நான் நடிக்க விரும்புவதாக விருப்பம்தெரிவித் தேன். இந்த இழப்பை தாங்க அவரது குடும்பத்தினருக்கு கடவுள் வலிமை தரட்டும்’ என் தெரிவித்திருக்கிறார்.