சென்னை: இணையத்தில் வைரலாகும் தோனியின் வீடியோ!

சென்னை கடற்கரையில் தல ‘தோனி’ தனது மனைவி சாக்‌ஷி மற்றும் மகள் ஜிவாவுடன் ஜாலியாக விளையாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

dhoni

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவரும், முன்னாள் பிசிசிஐயின் தலைவருமான சீனிவாசனின் வாழ்க்கையை விவரிக்கும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதல் பிரதியை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பங்கேற்றனர்.

இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு பங்கேற்பதற்காக சென்ன்னை வந்த தோனி, தனது மனைவி சாக்‌ஷி மற்றும் மகள் ஜிவாவுடன் கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது மகள் ஜிவாவுடன் கடல் அலையில் விளையாடிய வீடியோவை தோனி தனது இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.