ஜெர்மனி நிறுவன தூதராக தோனி நியமனம்

டில்லி:

ஜெர்மனியை சேர்ந்த மென்பொருள் நிறுவனத் தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

‘வார்டுவிஷ்’மென்பொருள் நிறுவனம் 3 ஆண்டுக்கு தோனியை தூதராக ரூ. 15 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் திறம்பட செயல்பட முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மகராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த இண்டிகோ பெயின்ட் நிறவன தூதராகவும் தோனி ஒப்பந்தம் செய்துள்ளார். மேலும் ரன் ஆதாம் நிறுவன ஆலோசகராகவும், தூதராகவும் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தோனி கூறுகையில்,‘‘வார்டுவிஷ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது ஆலோசனை மற்றும் அந்நிறுவனமும் இணைந்து செயல்படுவோம்’’ என்றார்.