மனைவி, மகளுடன் டான்ஸ் ஆடும் தோனி… வைரல் வீடியோ…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வீரருமான  தோனி தனது மனைவி சாக்ஷி மற்றும்  குழந்தை ஷிவாவுடன் நடனமாடி அசத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் டிவிட்டர் பகிர்ந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி , கடந்த ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், தொடர்ந்து சிஎஸ்கே அணியில் ஆடுவதாக தெரிவித்து உள்ளார். ஆனால், நடப்பாண்டில்  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே பெரும் தோல்வி அடைந்தது. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் தோனி மீது புழுதிவாரி தூற்றினர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தோனி எங்கிருக்கிறார் என்ற தகவலே இல்லாமல் இருந்து வந்தது. இநத் நிலையில், தோனி, தனது மகள் மற்றும் மனைவியுடன்  பார்ட்டி ஒன்றில் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வண்ண விளக்குகளின் ஒளிகளுக்கிடையே கோட் சூட் அணிந்துள்ள  உள்ள தோனி தனது மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஷிவாவுடன் நடனமாடுகிறார்.

தற்போது அந்த வீடியோ, தோனி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.