பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணியின் வெற்றியை உற்சாகமாக ஆடிப்பாடி கொண்டாடிய தோனி மகள்…. வைரலாகும் வீடியோ

லண்டன்:

பாகிஸ்தானை வென்ற இந்திய அணியின் வெற்றியை உற்சாகமாக, இளம் வீரர் ரிஷப் பந்துடன் இணைந்து ஆடிப்பாடி கொண்டாடினார் தல தோனியின்  மகள் ஜிவா தோனி… இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடப்பு ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை  22 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. நேற்று நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடையே பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் வெற்றியை இந்திய ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வந்த நிலையில்,  தவான் காயம் அடைந்ததால், அவருக்கு பதிலாக அழைக்கப்பட்ட ரிஷப் பந்தும் நேற்றைய போட்டியை தோனியின் மகள் ஜிவா தோனியுடம் அமர்ந்து பார்வையிட்டார்.

ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றதும், மான்செஸ்டர் மைதானமே கரகோஷங்களால், வெற்றிக்கூச்சல்களினாலும் அல்லோலப்பட்ட நிலையில், தோனியின் மகள் ஜிவா தோனியும், ரிசப்பந்துடன் இணைந்து., ஓவென்று சத்தம்போட்டுக்கொண்டு, குதித்து குதித்து சிறப்பாக வெற்றியை கொண்டாடிய வீடியோ வெளியாகி உள்ளது இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….

Leave a Reply

Your email address will not be published.