மகேந்திர சிங் தோனி மற்றும் கேதர் ஜாதவின் பொறுப்பான ஆட்டத்தால் ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றிப்பெற்றது.

india

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன் முதல் ஒருநாள் போட்டி இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி சார்பில் முதலில் களமிறங்கிய கேப்டன் ஆரோன் பின்ச் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரது விக்கெட்டை பும்ப்ரா கைப்பற்றினார்.

அவரை தொடர்ந்து வந்த உஸ்மான் கவாஜா, ஸ்டாய்னுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்டாய்ன் 37 ரன்களுடனும், உஸ்மான் அரைசதம் எடுத்து வெளியேறினர். அவர்களை தொடர்ந்து வந்த பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 19 ரன்களுடன், மேக்ஸ்வெல் 40 ரன்களுடனும் வெளியேற ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் முகமது ஷமி, குல்தீப் யாதவ், பும்ரா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ரா இலக்குடன் இந்திய அணி வீரர்கள் களமிறங்கினர். இந்திய அணி சார்பில் வந்த ஷிகர் தவான் முதல் பந்திலேயே வெளியேறி, ரோஹித் சர்மாவுடன் கேப்டன் விராட் கோலி இணை சேர்ந்தார். தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 44 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரோஹித் சர்மா 37 ரன்களில் வெளியேற அ
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய கேதர் ஜாதவ் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து பொறுப்பாக விளையாடினர்.

விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் ஆஸ்திரேலிய பவுலர்களின் பந்து வீச்சை சமாளித்து ஒன்று மற்றும் இரண்டு ரன்கள் எடுத்து இருவரும் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இருவரும் அரைசதம் கடக்க இந்திய அணி 48.2 ஓவரில் 4விக்கெட் விழப்பு 240 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. கேதர் ஜாதவ் 81 ரன்களுடனும், தோனி 59 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் இந்திய அணி 6 விக்கெட் வித்யாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றிப்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.