ஒரு குழந்தைக்காக அனைவரையும் கண்கலங்க வைத்த தோனி மற்றும் கோலி

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதிய கடைசி ஒருநாள் போட்டியின் போது உடல் ஊனமுற்ற குழந்தையை கேப்டன் விராட் கோலி மற்றும் தோனி சந்தித்த வீடியோ தற்போது சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது.

dhoni

இந்தியா வந்த மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றி அசத்தியது.

இதையடுத்து நடைபெற்ற 5போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-1 என்ற நிலையில் கைப்பற்றியது. இந்த தொடரின் 5வது ஒரு நாள் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்கும் முன்பாக உடல் ஊனமுற்ற குழந்தையை கேப்டன் கோலி, தோனி ஆகியோர் சந்தித்த வீடியோ வைரலாகி வருகிறது.

இப்போட்டி துவங்கும் முன் மைதானத்துக்கு வீரர்கள் வருகைக்காக காத்திருந்த ரசிகர்களில் லட்ஜூ என்ற ஊனமுற்ற குழந்தை, வீல் சேரில் காத்திருந்தான். அவர் தோனி, கேப்டன் கோலியின் தீவிர ரசிகர். இவரைப் பார்த்தவுடன் வந்த தோனியின் கைப்பிடித்து லட்ஜூ முத்தம் கொடுத்தார். பின் அவர் கொடுத்த போட்டோவில் ஆட்டோகிராப் போட்டு விட்டு சென்றார்.

பின் வந்த கேப்டன் கோலியும் அவருடன் பொறுமையாக பேசி போட்டோவில் ஆட்டோகிராப் போட்டு விட்டு சென்றார். இது அருகில் இருந்த ரசிகர்களை கண்கலங்க செய்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.