சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் மீண்டும் தோனி?

சென்னை

சென்னை சூப்பர் கிங்க்ஸ் கிரிக்கெட் அணியில் மீண்டும் தோனி விளையாடுவார் என செய்தி வந்துள்ளது.

கடந்த   2015 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் தற்போது ராஜஸ்தான்  வீரர்கள் ரைசிங் பூனே சூப்பர் ஜெயண்ட் அணி உட்பட பல அணிகளில் உள்ளனர்.

ஐபில் 2017 ஏலத்துக்கு முன்பிருந்த வீரர்களில் மூவர் அதே அணியில் இருக்க முடியும்.

அதன்படி தற்போது  சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தன்னுடைய வீரர்கள் மூவரை திரும்ப அழைக்க முடியும்.

அப்படி அழைக்கும் போது அணி நிச்சயம் தங்களிடம் இருந்த திறமையான ஆட்டக்காரரை திரும்ப அழைக்கக் கூடும்.

அதாவது தோனி விரைவில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் விளயாடக் கூடும்.

இவ்வாறு அந்தச் செய்தி தெரிவிக்கிறது