அடுத்த ஐபிஎல் தொடருக்கும் தோனியே கேப்டன் – நம்பிக்கை தெரிவிக்கும் சென்னை அணி!

துபாய்: அடுத்த ஐபிஎல் சீசனுக்கும், சென்னை அணிக்கு, மகேந்திரசிங் தோனியே கேப்டனாக தொடர்வார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் அந்த அணியின் நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. அதிலும், கேப்டன் தோனியின் பெர்பார்மன்ஸ் படுமோசம்.

இந்நிலையில், அடுத்த ஐபிஎல் போட்டியில், இவர் சென்னை அணியில் நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்துள்ள காசி விஸ்வநாதன் கூறியுள்ளதாவது, “அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை அணியை தோனி வழிநடத்துவார் என்று நம்புகிறேன்.

அவர் 3 முறை கோப்பை வென்று தந்துள்ளதோடு, எல்லா தடவைகளிலும் அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இது யாருமே செய்யாத சாதனை.

நாங்கள் இத்தொடரில் தகுதிக்கேற்ப விளையாடவில்லைதான். அதற்காக, ஒரு தொடரை வைத்து அனைத்தையும் தீர்மானித்துவிட முடியாது. சில வீரர்கள் விலகியதால் பேலன்ஸ் பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான்” என்று கூறியுள்ளார்.