அடுத்தப் போட்டியில் தோனி களமிறங்கலாம்: சுரேஷ் ரெய்னா

சென்னை: அடுத்தப் போட்டியில் தோனி விளையாடுவதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்காலிக கேப்டன் சுரேஷ் ரெய்னா.

ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடந்தப் போட்டியில் தோனி விளையாடவில்லை. முதுகில் ஏற்பட்ட நரம்புப் பிடிப்பு காரணமாக தோனி விளையாடவில்லை என கூறப்பட்டது.

அப்போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்தத் தோல்வியை ஒரு எச்சரிக்கை மணி என்று கூறியுள்ளார் ரெய்னா.

“நாங்கள் வெறுமனே 132 ரன்கள் மட்டுமே எடுத்தது தோல்விக்குக் காரணம். இன்னும் அதிக ரன்களை எடுத்திருக்க வேண்டும். இது எங்களுக்கான ஒரு எச்சரிக்கை மணி. அடுத்தப் போட்டியில் அணியின் கேப்டன் தோனி விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன” என்றார்.

– மதுரை மாயாண்டி