டி20 போட்டிகளில் இருந்து தோனி நீக்கம்: நெட்டிசன்கள் ‘செம டென்ஷன்’

மேற்கு இந்திய தீவுகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 – 20 போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனியுன் பெயர் இடம் பெறவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐக்கு எதிராக சமூக வலைதளங்களில் தோனி ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். பலர் டென்ஷனாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது ஐந்து ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. தொடர்ந்து  இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடர் முடிவுக்கு பின்னர் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்யவுள்ளது. அங்கு முதலில் இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில்  பங்கேற்கிறது.

இந்த இரண்டு தொடருக்கான இந்திய அணியிலிருந்தும் தோனி நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தோனி நீக்கப்பட்டதற்கு அவரது ரசிகர்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

‏தல தோனி இல்லாம என்ன டா தீபாவளி உங்களுக்கு #Dhoni

‏ஆடுகளத்தில் தோனி இல்லை என்றால் காட்டில் சிங்கம் இல்லாத மாதிரி

‏கலைஞர் இல்லாத அரசியல்.. தோனி இல்லாத கிரிக்கெட்..கடந்துபோக பழகுவோம் மக்களே 

நான் வீழ்வேன் என நினைத்தாயா ? காலம் பதில் சொல்லும்  

‏தோனி பிட்னஸ்    இப்பவும்.. இதுவரைக்கு இருந்த இந்தியன் டீம்ல இந்த வயசுலையு பெஸ்ட் ரன்னர் ஆப் தி டீம்

மேற்கை ஏற்காதே வீழும் சூரியனே.. தர்மம் தோற்காதே ஆளும் காவலனே.. தோனி

டோனி இல்லாமால் ஆஸ்திரேலியாவில் விளையாடுவது நரகத்திற்கு சமம்

பாகுபலிய காணோம்னு மக்கள் எப்படி மகிழ்மதில போய் கூச்சல் போட்டாங்களோ

‏தோனி என்கிற சகாப்தத்தின் முடிவு நம்மை நெருங்குகிறது என்றே தோன்றுகிறது…

மக்கள் அபிமான வீரர்கள் என்றுமே மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பர்….

‏தோனி பேன்ஸ் நாங்களே அமைதியா இருக்கோம்.. ஹேட்டர்ஸ் ஏன் கதறிட்டு இருக்கீங்க.. 

ஆயிரம்  சச்சின் வரலாம். ஆயிரத்து அம்பது கோலி வரலாம். ஆனா மாற்றே இல்லாத முதலும் கடைசியுமான ஒரே பாகுபாலி தலைவன் மஹேந்திர சிங் தோனிதான்

‏இன்னும் எத்தனை பேர் வந்தாலும் இவர மாதிரி ஒருத்தர் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்

இவ்வாறு சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.