சி எஸ் கே தவிர எந்த அணியிலும் விளையாட விரும்பவில்லை : தோனி

சென்னை

ன்னை பல அணியில் அழைத்தாலும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் மட்டுமே விளையாட விரும்பியதாக மகேந்திரசிங் தோனி கூறி உள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய ஐபிஎல் அணிகளுக்கு ஃபிக்சிங் விவகாரத்தில் இரு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது.   தற்போது இந்த் அணிகள் மீதான தடைகள் நீங்கி வரும் 2018ஆம் ஆண்டு போட்டிகளில் விளையாட உள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகிய மூவரும் திரும்பி உள்ளனர்.   இன்று தோனி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அந்த சந்திப்பில் தோனி,  “சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் விளையாடுவது எனக்கு மகிழ்வை அளிக்கிறது.   என்னை பல அணிகள் அவர்கள் அணியில் விளையாட அழைத்தன.   ஆனால் எனக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவதே மிகவும் பிடிக்கும்.   மற்ற அணிகளில் விளையாட எனக்கு விருப்பமே இல்லை.

இரண்டு ஆண்டுகள் இந்த அணிக்காக விளையாடமல் போனது எனக்கு வருத்தம் அளிக்கிறது.   அத்துடன் எங்கள் அணியில் அஷ்வினை சேர்க்க முயன்று வருகிறோம்.    அனைத்து வீரர்களும் தங்கள் முழுத்திறமையை வெளிப்படுத்தக்கூடிய சூழ்நிலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மட்டுமே உள்ளது”  என கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.