13 வருடங்களுக்குப் பிறகு ரயிலில் பயணித்த தோனி

--

விஜய் ஹசாரே கோப்பையின் முதல் போட்டியில் பங்கேற்பதற்காக ஜார்கண்ட் அணியின் சக வீரர்களுடன் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ரயிலில் பணித்தார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி.

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து  தோனி விலகிய பிறகு, இந்தியன் பிரீமியர் லீக்கில் புனே அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என்று ஒரு பேச்சு அடிபட்டது.  ஆனால் புனே அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டார்.  இந்த நிலையில், விஜய் ஹசாரே கோப்பைக்காக ஜார்க்கண்ட் அணிக்கு கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார்.

விஜய் ஹசாரே கோப்பையில் ஜார்கண்ட் அணி தன் முதல் போட்டியில் கர்நாடகாவை எதிர்கொள்ள இருக்கிறது.  இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிப்ரவரி 25-ம் தேதி நடைபெறும். . இந்த போட்டியில் பங்கேற்பதற்காக அணியின் மற்ற இளம் வீரர்களுடன் 13 வருடங்களுக்கு பிறகு ரயிலில் பயணித்தார் தோனி..

 

ஜார்கண்ட் மாநிலம் ஹடியாவில் இருந்து கொல்கத்தாவின் ஹவுரா வரை முதல் வகுப்பு ஏசி கோச்சில் பயணித்த தோனி, ஜார்கண்ட் அணி வீரர்களுடன்  எடுத்த புகைப்படங்களை, தனது இன்ஸ்டாகிராமில்பதிவிட்டிருந்தார்.

வித்தியாசமான மனிதர்தான்.