தோனி மீண்டும் ஐபிஎல் போட்டியில் விளையாடுவார்: சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் நம்பிக்கை

சென்னை:

தோனி மீண்டும் ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் என சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், வலுவான பேட்டிங் இருக்கும் சிஎஸ்கே அணி இம்முறை மோசமாக விளையாடியதாக நான் நினைக்கவில்லை.
எங்களிடம் இருக்கும் வீரர்கள் அனைவரும் தனிப்பட்ட முறையில் அணியை வெற்றி பெறச் செய்பவர்கள்.

ரன்னராக வந்ததை போனஸாக நினைக்கவில்லை. சிஎஸ்கே வெற்றி பெற தகுதியுள்ள அணிதான் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

பெரிய போட்டிகளில் நன்கு விளையாடுவது அணியின் ரத்தத்தில் ஊறிப் போயிருக்கிறது.
சிஎஸ்கே சரியாக விளையாடி இருக்காவிட்டால், இறுதி போட்டியில் கடைசி பந்து வரை எதிர்கொண்டிருக்க முடியுமா?

தோல்வி கடினமாகத்தான் உள்ளது. எனினும் போராடி தோற்றது எங்களுக்கு திருப்தியாகவே உள்ளது.
உலகக் கோப்பை தோனியின் கடைசி ஆட்டமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

கடந்த 2 ஆண்டுகளாக தோனி நன்றாகவே விளையாடியிருக்கிறார். உலகக் கோப்பை போட்டியிலும் அவர் சிறப்பாக விளையாடுவார்.
மேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியிலும் அவர் கலந்து கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published.