“அணியில் வாய்ப்புக் கிடைப்பதை, சென்னை அணியின் வீரர்கள் அரசு வேலையைப் போல் நினைத்துக் கொள்கிறாரகள்” என்று சில நாட்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் நட்சத்திரம் வீரேந்திர சேவக் விமர்த்திருந்தார்.
ஆனால், அவர் கூறியது சென்னையின் பிற வீரர்களுக்கு எப்படிப் பொருந்துகிறதோ இல்லையோ, கேப்டன் தோனிக்கு அப்படியேப் பொருந்துகிறது!
பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்துவிட்ட தோனி, தற்போது ஐபிஎல் தொடரில் நடந்துகொள்ளும் விதமே வேறாக இருக்கிறது. பெரிதாக வளர்ந்துவிட்ட எவருக்குமே ஈகோ என்பது தவிர்க்க முடியாத ஒரு அம்சமே!
அதேசமயம், பெரியாட்களின் ஈகோ, அவர்களின் தொடர் வெற்றிக்கு உதவுவதாய் இருந்தால் பரவாயில்லை. மாறாக, விமர்சனத்திற்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்துவிட்டால், அதைப்பற்றி சொல்வதற்கு பெரிதாக எதுவுமில்லை.
ஆனால், தற்போதைய நிலையில், ஒரு அணியின் கேப்டனாக தோனியின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. பலரும் எள்ளி நகையாடும் நிலையில் உள்ளது. தனக்குப் பிடித்தமானவர்கள் எவ்வளவு மோசமாக ஆடினாலும் தொடர்ந்து வாய்ப்பு தருவது, தனக்குப் பிடிக்காதவர்கள் என்றால், நன்றாக விளையாடினாலும் வாய்ப்பை மறுப்பது, தன்னளவிலும் தொடர்ந்து மோசமாக ஆடுவது என்று அதகளம் செய்து வருகிறார் தோனி.
இதனால், இதுவரையான ஐபிஎல் தொடர்களில், சென்னை அணி, முதன்முறையாக பிளேஆப் சுற்றுக்கு நுழையமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்குமேல் தான் ஏலமெடுக்கப்பட்டால் என்ன அல்லது ஐபிஎல் ஆடினால்தான் என்ன என்ற மனநிலைக்கு தோனி வந்துவிட்டதாவே அவரின் செயல்பாடுகள் உணர்த்துகின்றன!