ஒரே மேட்சில் 5 கேட்சுகள் ஒரு ரன் அவுட் : தோனியின் நேற்றைய சாதனை

மான்செஸ்டர்

நேற்று நடந்த டி 20 கிரிக்கெட் பந்தயத்தில் இந்திய வீரர் தோனி ஒரே போட்டியில் 5 கேட்சுகள் பிடித்து ஒரு ரன் அவுட் செய்து புதிய சாதனையை எட்டி உள்ளார்

இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது.   இந்த பயணத்தில் மூன்று டி 20 போட்டிகள் நடந்தன.   அதில் முதல் போட்டியில் இந்தியாவும் இரண்டாம்  போட்டியில் இங்கிலந்தும் வெற்றி பெற்றன.    அதனால் நேற்று நடந்த போட்டியில் இரு அணிகளும் கடுமையாக மோதின.

டாசில் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்ந்தெடுத்தது.    இங்கிலாந்து வீரர்கள் அபாரமாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது.   அடுத்து விளையாடிய இந்திய அணி ரோகித் சர்மாவின் சதத்தினால் முன்னேறி இங்கிலாந்தை தோற்கடித்தது.

இந்த போட்டியின் போது மகேந்திர சிங் தோனி அபாரமாக விளையாடி ஆறு விக்கட்டுகளை வீழ்த்தி உள்ளார்.   அதில் ஐந்து கேட்சுகளும் ஒரு ரன் அவுட்டும் என்பது குறிப்பிடத் தக்கது.   தோனியின் இந்த சாதனை கிரிக்கெட் ரசிகர்களை பரவசத்தில ஆழ்த்தி உள்ளது.

சென்னை சூபர் கிங்ஸ் அணியின் தலைவராக தோனி உள்ளதால் இதை அந்த அணியின் டிவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளனர்.   மேலும் ரசிகர்களும் இந்த தகவலை பதிர்ந்து #விசில்_போடு,   #தல_தோனி என டிரண்ட் ஆக்கி உள்ளனர்.