ஊரடங்கில் உருவான திரிஷ்யம் இரண்டாம் பாகம்..

மலையாளத்தில் குறிப்பிட்டுச் சொல்லும் இயக்குநர்களில் ஜீத்து ஜோசப்பும் ஒருவர்.

இவரது டைரக்ஷனில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான படம்-

திரிஷ்யம்.

மோகன்லால்- மீனா ஜோடியாக நடித்திருந்த இந்த படம் கேரள ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட சினிமா ஆகும்..

தமிழில் கமலஹாசன் –கவுதமி ஜோடியாக நடிக்க ‘பாபநாசம்’’ என்ற  பெயரில் வெளியான இந்த படம் இங்கும் சக்கை போடு போட்டது.

தெலுங்கு, கன்னடம், மற்றும் இந்தியிலும் திரிஷ்யம் ’ரீ –மேக்’ செய்யப்பட்டு, வசூல் குவித்தது.

அந்த படத்தின் இரண்டாம் பாகம் மலையாளத்தில் தயாராக உள்ளது.

மோகன்லால் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். ஜீத்து ஜோசப் இயக்குகிறார்.

ஊரடங்கு நேரத்தில்  கிடைத்த இரண்டு மாத ஓய்வைப் பயன்படுத்தி திரிஷ்யம்- 11 வின் ‘ஸ்கிரிப்ட்’டை உருவாக்கி உள்ளார், ஜீத்து ஜோசப்.

கதை மோகன்லாலுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது.

ஊரடங்கு முடிந்து, ஷுட்டிங் நடத்தக் கேரள அரசு அனுமதி கிடைத்ததும், ‘திரிஷ்யம்’’ படப்பிடிப்பு ஆரம்பமாகும்.

திரிஷ்யம் போல் இதுவும், சின்ன பட்ஜெட் படம் தான்.

– ஏழுமலை வெங்கடேசன்