சியான் 60 படத்திற்கு தயாராகும் துருவ் விக்ரம்….!

தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டியை மகனின் முதல் படமாக்க முற்பட்டார் சீயான் விக்ரம் .

படம் ஃபிளாப் தான் எனினும் துருவ் விக்ரமுக்கு நல்ல ஓப்பனிங்காக அமைந்தது. ஹீரோ மெட்டிரியல் என்ற அங்கீகாரமும் அவருக்கு கிடைத்துவிட்டது.

கொரானா ஊரடங்கில் ஷூட்டிங் ஏதுமில்லாததால் அப்பா மகன் இருவரும் ஜிம்மே கதி என கிடக்கின்றனர் .

இந்நிலையில் இந்த மாத ஸ்பெஷல் லுக் என துருவ் இன்ஸ்டாக்ராம்மில் போட்டோ பதிவிட்டுள்ளார். ஜெமினி படத்தில் வரும் சியான் விக்ரம் போல் தாடியுடன் காணப்படுகிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஃபிட்டான அப்பா மகன் காம்போவை சீயான் 60 திரைப்படத்தில் காணலாம்.