மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்…..?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிக்க துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

‘கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் துருவ் விக்ரமை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டணி உறுதியாகிவிட்டது என்றும், ‘கர்ணன்’ பணிகள் அனைத்தும் முடிந்தவுடன் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

இறுதிக்கட்டப் பணிகளை முடித்து ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் ‘கர்ணன்’ படம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.