Random image

விக்ரம் சிக்ஸ்பேக் ஃபோட்டோவை தொடர்ந்து இணையத்தில் ட்ரெண்டாகும் துருவ் விக்ரம் படம்….!

‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘கோப்ரா’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம்.

‘கோப்ரா’ படத்தில் பல்வேறு கெட்டப்களில் நடித்துள்ளார் விக்ரம். அந்தப் படத்தின் போஸ்டரில் இருந்த கெட்டப்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இதனிடையே, தற்போது விக்ரம் சிக்ஸ்பேக்குடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. விக்ரமின் புகைப்படத்தைப் பலரும் ஷேர் செய்யவே #ChiyaanVikram, #Vikram ஆகிய ஹேஷ்டேகுகள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.

ஆனால், இந்த மாற்றம் கார்த்திக் சுப்புராஜ் படத்துக்காக என்பது உறுதியாகியுள்ளது. ஏனென்றால், விக்ரம் போலவே அவருடைய மகனும் உடலமைப்பை முழுமையாக மாற்றி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். விக்ரம் – துருவ் விக்ரம் இருவருமே இணைந்து கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கவுள்ளதால், அந்தக் கதைக்காக தங்கள் உடலமைப்பை மாற்றியுள்ளனர்.

விக்ரம் படத்தைத் தொடர்ந்து தற்போது துருவ் விக்ரம் படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.