முன்னணி இயக்குனர் விஜய்யுடன் கை கோர்க்கும் துருவ் விக்ரம்…!

பாலா இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் ‘வர்மா’ என்ற பெயரில் ‘அர்ஜுன் ரெட்டி’. ரீமேக் செய்யப்பட்டது. ஆனால், இறுதிப் பிரதி திருப்தி அளிக்காததால் படம் கைவிடப்பட்டது.

தற்போது ‘அர்ஜுன் ரெட்டி’ படம், ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் துருவ விக்ரம் அடுத்த படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் தலைவா, தாண்டவம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய விஜய் இயக்குகிறார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி