திரும்பி வாண்ணா, நீ இல்லாமல் இருக்க முடியல : த்ருவா சார்ஜா

ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மருமகனான கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த 7ம் தேதி மதியம் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

சிரஞ்சீவிக்கு இப்படி ஒரு மரணமா என்று திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் என்று பலரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார்கள்.

சிரஞ்சீவி இறப்பதற்கு முந்தைய நாள் தன் தம்பிகளுடன் சேர்ந்து சிறு வயதில் எடுத்த புகைப்படத்தையும், சமீபத்திய புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தை த்ருவா சார்ஜா தற்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து நீ திரும்பி வந்துவிட வேண்டும். நீ இல்லாமல் வாழ முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சிரஞ்சீவி இறந்துவிட்டார் என்பதை எங்களாலேயே இன்னும் நம்ப முடியவில்லை. அப்படி இருக்கும்போது அவரின் தம்பியான உங்களுக்கு நிச்சயம் கஷ்டமாகத் தான் இருக்கும் என கன்னட ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர் .