நீரிழிவு இதய தசை நோய் என்பது நீரிழிவினால் இதய தசைகள் பாதிக்கப்படும் ஒரு குறை பாடாகும். நிரிழிவு நோயாளிகள் உயிரிழப்பதற்கான காரணங்களில் இந்த நோய் முதலிடத்தில் உள்ளது. நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கு ஏற்படக்கூடிய இதய தசை நோயை விட, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏற்படக்கூடிய இதய தசை நோய் மூன்று மடங்கு ஆபத்தானது.

இந்த வகை இதய தசை நோய்க்கு ஆங்கில மருந்துகள் அளிக்கப்பட்டு வந்தாலும், பக்க விளைவுகள் இல்லாத இயற்கை மருத்துவ முறைகளை பயன்படுத்துவது தற்போதைய சூழலில் அவசியமாகிறது. இந்த வகையில் ஆண்டி ஆக்சிடண்ட் தன்மை, கட்டிகளை நீக்கக் கூடிய தன்மை, வீக்கத்தை நீக்கும் தன்மை ஆகியவை கொண்டுள்ள மஞ்சள், நீரிழிவு இதய தசை நோய்க்கு சிறந்த மருந்தாக அமைகிறது.

மருத்துவ ஆய்வுகளின்படி இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்துவது, ஹைபர்கிளைகீமியா, உடல் பருமன், உடல் பருமன் தொடர்பான நோய்கள் ஆகியவற்றை மஞ்சள் குணப்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

நீரிழிவு இதய தசை நோய் மட்டுமல்லாமல், நீரிழிவு நோயையும் குணப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

நன்றி:

https://www.ncbi.nlm.nih.gov/pubmed/28063511

செல்வமுரளி