Dr.Safi©👨🏻‍⚕
Nagercoil

இன்று உலக சர்க்கரை நோய் தினம் !

ஒவ்வொரு வருடமும் இன்சுலின் 💉எனும் அருமருந்தினை கண்டுபிடித்து உலகிற்கு கொடுத்திட்ட ப்ரெட்ரிக் பேண்டிங்( #Frederick_Banting) அவர்களின் பிறந்த தினமான நவம்பர் 14 ம் தேதியை உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

அதே போல் ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளுக்கு என ஒரு கருப்பொருள் உருவாக்கப்படும் ,
அதை ஆங்கிலத்தில் Theme என்பர் அதைபோல் இந்த ஆண்டு உலக சுகாதார மையம் WHO அளித்துள்ள கருப்பொருள்

The Family and Diabetes- Diabetes concerns every family

” சர்க்கரை நோயில் குடும்பங்களின்👨‍👨‍👧‍👦 பங்கு”

சரி , சர்க்கரை நோய் டயரி 📒என நான் குறிப்பிட்டது போல் ,

சர்க்கரை நோய் பற்றி சந்தேகங்களை என் நோயாளிகள் என்னிடம் கேட்கும்,
கேள்வி ❓ பதில்‼  நடையில் ஒவ்வொன்றாய் பார்ப்போம் . !!

1. சர்க்கரை நோய் ஏன் வருகிறது ❓ அது வருவதற்கான முக்கியமான காரணம் என்ன ❓

சர்க்கரை நோய் அதாவது நீரிழிவு நோய் என்பது ஓர் நோயே அல்ல ‼

2. அது நோயில்லையா ❓ அய்யோ ..!எப்படி சார் ❓

ஆம்..!
சர்க்கரை நோய் என்பது நம் உடலில் ஏற்படும் ஓர் குறைபாடு ⬇ ..!

நமக்கு இயற்கை அளித்திருக்கும் நாவில் உமிழ்நீர் போல கணையத்தில் இன்சுலின் எனும் நீர்திரவம் உற்பத்தியாகும்,
இந்த கணையம் எனும் உறுப்பு பாதிக்கப்படுவதால் ஏற்படும் இந்த இன்சுலின் திரவம் சுரக்கும் குறைபாடு தான் நீரிழிவு நோய் .‼.

இன்று இந்தியாவில் சுமார் 15 கோடி பேருக்கு நோய் இருப்பதாக சொல்லப்படுகிறது , ஆனால் மீதமுள்ள சனத்தொகையில் 60 சதவீதம் பேர் , நோய் அறியாமலோ , ஆரம்ப நீரிழிவு நோய் எனும் Prediabetes நோயுடனோ தான் வாழ்ந்து வருகின்றனர் ,

நோயை அறிந்து மருந்துண்ணும் மக்கள் கணக்கை விட நோய் அறியாது , எந்த கட்டுப்பாடும் இல்லாது உலவிடும் இவர்கள் தான் அதிகம் 😡!

3. இன்சுலின் 💉 என்றால் என்ன சார் ❓

கண்களில் 👁உள்ள கண்ணீர் நாவில் 👅உள்ள உமிழ்நீர் போல ,  நம் உடலில் பலவகையான நீர் களை சில நாளமில்லா சுரப்பிகள் சுரக்கின்றன , அதில் முக்கியமான சில நாள சுரப்பிகளில் முதன்மையானது கணையம் மற்றும் அதிலுள்ள சிலவகை அணுக்கள் 🧫, அதன் அணுக்களில் சுரக்கும் பீட்டா அணுக்கள் தான் இன்சுலின் எனும் ஹார்மோனை சுரக்கும் !

3. இந்த இன்சுலின் ஹார்மோனின் வேலை என்ன சார் ❓

இன்சுலின் ஹார்மோன் என்பது பல ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் ஒரு உத்தரவிடும் சுரப்பி நீர் , அதாவது , நாம் உண்ணும் உணவில் இருந்து நம் உடல் மற்றும் மன இயக்கத்திற்காக செலவிட தேவையான கலோரிகளை அளிக்கும் கார்போஹைட்ரேட் உணவுகள் மூலம் வெளியேறும் க்ளூகோஸ் எனும் சர்க்கரை கலவைகளை ரத்த அளவில் ஏற🚫 செய்யாமல் ,

ரத்தத்தில் சர்க்கரை அதிகப்படுவதனால் ஏற்படும் ரத்த ரசாயன மாற்றங்கள் மற்றும் உறுப்பு பாதிப்புகளை தடுத்திடவும் ,
இந்த ஒவ்வொரு அணுக்களுக்கும் தம் ஆற்றலுக்காக ரத்த சர்க்கரை அளவு தேவைப்படுகிறது ,

ஆனால் அது ஓர் பூட்டிய அறை , அந்த அறையை திறந்து இந்த க்ளுகோசினை உள்ளே அனுப்பிட தேவைப்படும் சாவி 🔑 தான் இன்சுலின் எனும் ஹார்மோன் , இது போல தனி தனி வாயில் , தனி தனி பூட்டு 🔐, அதற்கேற்றார் போல நிறைவுபெற்ற இன்சுலின் எனும் சாவி 🔑 வேண்டும் ,

இந்த இயக்கத்தில் எது மாறுபட்டாலும் , அந்த பூட்டு 🔐 திறக்காது , அப்படியே திறந்தாலும் தன்னிறைவு பெற்ற இயக்கம் இருக்காது ,

அதே நேரத்தில் ,

தேவைக்கும் அதிகமாக இன்சுலினை சுரக்க தூண்டும் சர்க்கரை ,இனிப்பு 🍬🍭 மாவு 🍞🍔🥪மற்றும் பேக்கரி 🍰🍩 உணவுகளுக்கும் சற்றும் தளராமல் , எக்கசக்கமான இன்சுலின் சுரப்பி நீரை அனுப்பி , அனுப்பி , எக்கச்சக்கமான தன்னிறைவற்ற , உடைந்துபோன சாவி 🔑 கள் சரிவர பூட்டுக்களை திறந்து க்ளூகோசினை உள்ளே அனுப்பாது ரத்தத்திலேயே மிதந்திட வைக்கும் .

இதை தான்  இன்சுலின்_ரெசிஸ்டன்ஸ் ⛔எனும் அந்த மனிதனின் தேவைக்கு பலனளியா நிலைக்கும் பல சமயங்களில் நமது உடல் செல்லும் ,

அந்த நிலை தான் தற்போதைய பெரும்பாலானோருக்கு நோய் ஏற்படுத்தும் காரணி என்கிறோம் !!

4. எந்த காரணத்தினால் இந்த இன்சுலின் குறைந்து நீரிழிவு நோய் வருகிறது சார் ❓

பல வகையான சர்க்கரை நோய் இருப்பினும்

பெரும்பாலும் மருத்துவ உலகில்

டைப் 1⃣( 1ம் வகை)
டைப் 2⃣ ( 2ம் வகை)

எனும் இரு வகையாக தான் பிரிக்கிறோம் ,

இதில் 1⃣ம் வகை நோய்
நான் கூறிய இன்சுலின் எனும் நாள சுரப்பி சுரக்கும் பீட்டா அணுக்கள் முற்றிலும் இல்லாமலே🚫 ஜெனிக்கும் சிலருக்கு வரும் ! ..
அவர்களுக்கு நான் சொன்ன இன்சுலின் எனும் மூலக்கூறு என்பதே உடலில் சுரக்காது ,

கிட்டதட்ட கண்ணீர் இல்லாத கண் போல அல்லது உமிழ் நீர் இல்லா வறண்ட நாக்கு போல இன்சுலின் குறைவதால் , நீர்சத்து குறைந்து , அவர்களது மில்லியன் கணக்கான செல்கள் வறண்டு போய் காணப்பட வாய்ப்புண்டு ,

உலகளவில் நோய் பாதித்த மக்களில் 10 சதவிகித சர்க்கரை நோயாளிகள் மட்டுமே இந்த டைப்1⃣ வகையறாக்கள் .

அவர்களது வாழ்வாதாரம் முழுதும் வெளியில் இருந்து தரப்படும் இன்சுலின் 💉மருந்து மூலம் மட்டுமே இருக்கும் ,

சில நாட்கள் இன்சுலின் தருவதை நிறுத்தினாலோ , ஏன் , தேவைப்படும் அளவினை குறைத்தாலோ கூட மிக மோசமான விளைவுகள் 😥ஏற்பட்டு இறந்துபோகிற நிலைகூட அவர்களுக்கு வரும் ,

அடுத்தது ,

2⃣ம் வகை ,

இது தான் இன்றைய பிரதானமான சர்க்கரை நோய் ,

எங்கே திரும்பினாலும் சர்க்கரை நோய் ,
எங்க 🙇🏼அப்பாவுக்கு சுகர் ,
அம்மாவுக்கு 🙇🏼‍♀சுகர் அதிகமா இருக்கு ,
எனக்கு சுகர் 🙋🏻‍♂இருக்கு ,
என நாம் தினம் தினம் அறியும் நோய் வகை இதுதான் ,

இதற்கான முக்கிய காரணம் ,

நான் மேலே கூறிய இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்⛔ ,

அதாவது இன்சுலின்எதிர்ப்புதன்மை !!

5. என்ன சார் இது .இன்சுலின் ஏன் நம் செல்களை எதிர்க்கிறது ❓

இதுதான் முக்கியமான மேட்டர் !

1960 களில் நடந்த பொருளாதார உலகமயமாக்கத்திற்கு முன் இப்படிப்பட்ட கோரமான நீரழிவு நோய் என்பது 100 ல் 3 பேருக்கு இருந்ததாக தகவல் ,

அன்று இருந்த

உணவின் தரம் ,
உணவு கொள்முதல் முறைகள் ,
உணவுமுறை பழக்கம்,
உடல் உழைப்பு ,
வேலை செய்த விதம்,
வாகன உபயோகம் ,
நோயின் தாக்கம் ,

முக்கியமாக

தொலைக்காட்சியின் ரிமோட்  முதல் கூகிள் அலெக்சா வரை , எதுவுமே கிடையாது , சமையலறைகள் முழுதும் விறகு அடுப்பும், அம்மிக்கல், உரல், மத்து , இடிப்பான் கருவி என அனைத்தும் மனிதன் இயக்கும் கருவிகள் , அதே போல் வாகனம் எனில் சைக்கிள்,🚲
சைக்கிள் ரிக்‌ஷா , தள்ளு வண்டி , என உடல் உழைப்பினால் நகரும் வாகனங்கள் அதிகம் ,

தொலைக்காட்சி📺 கிடையாது, பலரும் வானொலி📻 கொண்டு நடப்பதை கூட நம்மில் சிலர் கண்டதுண்டு , முக்கியமாக உணவில்

சர்க்கரை, சீனி, இனிப்புகள், மாவு பண்டங்கள் எனதே பெரும்பாலும் விசேஷ தினங்களிலோ ,
விடுமுறை கொண்டாட்டத்திலோ, பண்டிகையிலோ ,  வீட்டு சுப காரியங்களிலோ மட்டும் தான் ,

உண்டாக்கப்படும் , பகிரப்படும் , ருசிக்கப்படும் , உண்ணப்படும் ,

அப்படி இருந்த நம் உணவு பழக்கம்

இன்று

இனிப்பில்லாத உணவே இல்லை
உணவு அருந்தி முடித்ததும்
இனிப்பு,
கேக் 🍰 , பிஸ்கட் 🍩,
சர்க்கரை கலசல் எனும் கூல்ட்ரிங்க்
பனிக்கூழ்கள்🍧 ,பீடா

என

மொத்தமாய் மாறிபோனோம் ,

கடைகளில் பொருட்கள் வாங்குவதில்

காய்கறிகள்🥬🥒
பழங்கள்🥑🍒
முட்டை ,இறைச்சி 🥚🍗,
மீன் வகைகள்🐟 ,
நல்ல நட்ஸ் 🥜எனும் கொட்டைகள் வாங்கி வந்த நாம்

தற்காலத்தில் நம் பைகளை நிறப்புவது

தின் பண்டங்களால் ,
அதிலும்
பலருக்கு
தினமும் சில வேளை உணவே இந்த தின்பண்டங்கள் தான்

கேட்டால்

பிஸ்கட்ஸ்,
சாண்ட்விச்,
ஓட்ஸ்,
கெல்லாக்ஸ்,
சப்லிமெண்ட்ஸ் என

இருக்கும் அனைத்து மாவு சத்துக்களை அதன் நன்மை பற்றிய எந்த சிந்தனையும் இன்றி எந்த உறுத்தல் இல்லாமல் வாய் எனும் குப்பைபெட்டிக்குள் பெருமையாக அடைக்கிறோம் !!

இந்த குப்பைகள் அனைத்துமே உள்ளெ சென்று உருவாக்குவது க்ளுகோஸ் எனும் வேதிப்பொருள் ,

இந்த வேதிப்பொருள் உள்ளே வந்தால் , அதை நம் உறுப்புகளை தாக்காமல் பாதுகாப்பது இன்சுலின் .ஆக ஒரு மனிதன்  மூன்று வேளை , இல்லை கேக் , பஜ்ஜி, வடை ,பப்ஸ் , சிற்றுண்டி கணக்கு உட்பட

சிலர் 5 முதல் 6 வேளை இதே க்ளூகோசினை உள்ளே நம் உடலுக்கு கொடுத்துகொண்டே இருக்கும்போது , அந்த சுரப்பிகள் ஏராளமான இன்சுலினை ஒவ்வொரு அணுக்களுக்கு உள்ளேயும் அனுப்பிக்கொண்டே இருக்கிறது , அதீத இன்சுலின் உள்ளே போக போக , சரியான ப்ரோக்ராம் செய்து அதன் அளவீட்டினை முறையாக பகிர முடியாமல் , கண்ட மேனிக்கு க்ளுகோஸ் வருவதால் , இன்சுலின் சுரப்பிகள் குழம்பி போய் , அங்கே ஓர் இன்சுலின் எதிர்நிலை⛔ உருவாகிறது , அந்த எதிர்நிலை இன்சுலின் சுரப்பிகளை அதிக , நிறைவான இன்சுலின் சுரக்கும் தன்மையை குறைக்கிறது , முழு நிறைவற்ற ,
தேவைக்கும் அதீதமான இன்சுலின் சுரந்து வடிவதால் அந்த இன்சுலின் முறையாக க்ளூகோஸ் அளவை குறைத்திடும் ஆக்கம் இயலாததாலும் ,

பெரும்பாலானோருக்கு சர்க்கரை நோய் வருகிறது !

6. அப்படியா ? இன்சுலின் இல்லாமல் வரும் நோய் வகை 1⃣
முறையான இன்சுலின் சுரக்க இயலாமையால் தேவையற்ற அதீத இன்சுலின் சுரந்து இன்சுலின் எதிர்நிலை வருவது வகை 2⃣ சரியா சார்❓

அருமை
மிகச்சரி ..‼

7. நோயை எப்படி சார் கண்டுபிடிப்பது ,
ரத்த சர்க்கரை ,
சிறுநீர் சர்க்கரை ,
இதில் எதை பார்க்கவேண்டும் ❓

இரண்டுமே தேவையில்லை ,

உங்களுக்கு 30 வயது ஆகியிருந்தால்
உடல் பருமன் இருந்தால்,
அதிக பசி🙇🏼
அதிக தாகம்🙇🏼
அதிக சிறுநீர்🙇🏼 கழித்தல்,
தலைவலி,🙇🏼
உடல் சோர்வு,🙇🏼
என ஏதேனும் அறிகுறிகள் இருந்தால்

HbA1C எனும் வெறும் வயிற்றில் எடுக்கும் பரிசோதனை மட்டும் செய்ய வேண்டும் ✅,

பின்னர் நோய் உள்ளவர்கள்
மூன்று மாதத்திற்கொருமுறை இதை பார்த்து மருத்துவ ஆலோசனை பெறுவது நலம் ,

ரத்த சர்க்கரை அளவுகள் 🔬🧪 தேவைப்படும் போது மட்டும் பார்த்தால் போதும்,

சிறுநீர் பரிசோதனை சர்க்கரை நோய் அறிவதற்காக பார்க்கவே வேண்டாம், ❌

ஆக HBA1C மட்டும் தான் சர்க்கரை நோய் அறியும் பரிசோதனைகளில் நம்பகமானது ✅,

முடிந்தால் மாஸ்டர்ஹெல்த்செக் அப் எனும்
மொத்த உறுப்புகளின் செயல்பாடுகளை அறியும் பரிசோதனை செய்து தம் உடல் நலம் அறிவது எப்போதுமே சிறப்பு ✔..

வருடம் ஒருமுறை வாகனத்திற்கு🛵🚘 இன்ஷூரன்ஸ் எடுப்பது போல நமக்கு இதை செய்து கொள்வதில் தவறில்லை ,

8. இந்த 2⃣ ம் வகை சர்க்கரை நோய் பாதிக்காமல் இருக்க என்ன சார் வழி ❓

மிக மிக எளிது ‼

அதாவது
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் சேரும் 3 சத்து பொருட்கள்

💡மாவுச்சத்து
💡புரதச்சத்து
💡நல்ல கொழுப்பு சத்து ,

இந்த மூன்று சத்துக்களில் இன்சுலின் அதிகமாக தேவைப்படும் சத்து

💣 மாவுச்சத்து ,

ஆக

நோய் இல்லாதவர்கள்
அல்லது
ஆரம்ப நீரழிவு நோய்( Pre Diabetes) உள்ளவர்கள்

தேவைக்கு அதிகமான மாவு சத்து தவிர்த்து
மீதமுள்ள
நல்ல கொழுப்புசத்து
மற்றும்
புரதசத்து மிகுந்த உணவுகளை நாம் அதிகமாக உண்ண பழகிட வேண்டும் ,

மாவு சத்து உணவில் ,.
சக்கையாக ( #Fiber) மாறும் மாவுசத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் ,

அதே நேரம்

அதிக எடை கொண்டவராக இருந்தால் உடல் எடையில் 15 சதவீதம் முறையான உணவுமுறை மாற்றம் மற்றும் உடற்பயிற்சி மூலம் குறைத்திடுஙகள் ,🔻

அடுத்து

ஏற்கனவே நோய் உள்ளவர்கள் !

முறையான மருத்துவ ஆலோசனையோடு ,
நீங்கள் மருத்துவம் எடுத்து வரும் மருத்துவரிடம்

குறை மாவு உணவு பரிந்துரை பற்றி கேட்டு அறிந்து ,
அதற்கேற்ற பரிசோதனைகள் செய்து ,
உங்கள் நோய்க்கேற்ற மருந்துகளுடன் வாழ்க்கை முறையை மாற்றி நோயின் அடுத்த கோரமுகத்தில் இருந்து தப்பிக்கலாம் ,

9. சார் சர்க்கரை நோய் ஒரு நோயல்ல என்றால் பிறகு எது சார் நோய் ❓

சர்க்கரை நோய் எனும் குறைபாடு சரிவர பராமரித்து கட்டுப்படுத்த தவறுவதால் அந்த நோயின் வீரியத்தினால் வரும்

உச்சந்தலை முதல்
உள்ளங்கால் வரையிலான

விளைவு நோய்கள் தான்
மீண்டு வர முடியாத நோய்கள் ,

10. இதில் குடும்பத்தின் பங்கு என்ன சார் ❓

ஆம்.

பொதுவாக சர்க்கரை நோய் வந்த நபரின் மொத்த பொறுப்பினையும் அவரது குடும்பத்தின் முக்கிய நபர் எவரேனும் ஏற்றுக்கொள்வது மிகவும் நன்மையானது ,

உதாரணமாக

📌அவரை மறவாது பரிசோதனைகள் செய்ய அறிவுறுத்துவது,

📌அவரது மருந்துகளை தவறாமல் உண்ண கொடுத்து விடுவது ,

📌அவருக்கு தினம் தினம் ஏற்படும் மாறுதல்களை குறிப்பெடுத்து மருத்துவரிடம் சொல்வது ,

📌அவரது உணவு முறை மற்றும் உடற்பயிற்சிகளில் ஊக்கபடுத்தி வருவது ,

📌அவரது
கால்,
விரல் இடுக்குகள்
பாதம் ,
போன்ற இடங்களை தினமும் பார்த்து பராமரிப்பது

என குடும்பங்களின்👨‍👨‍👧‍👦 பொறுப்பு முறையாக இருந்தால் பல நோயாளிகளின்

கண் பார்வை முதல்
கால் ஆணி பாதிப்புகள் வரை ஆரம்ப நிலையிலேயே அறிந்து ,
அதை மோசமாக்க விடாமல் பாதுகாக்கலாம் !

இந்த காரணத்தினால் தான் உலக சுகாதார மையம் இம்முறை

நோயில் குடும்பங்களின் அங்கம் பற்றிய முக்கியத்துவத்தினை விளக்கியிருக்கிறது !!

சர்க்கரை நோயை இன்னமும் சாதாரணமான விடயமாக அலட்சியப்படுத்தி ,
நோய் மருத்துவத்தினை உதாசீனப்படுத்தி ,
அவசியமற்ற ஆபத்தான் மருத்துவ முறைகளை தவிர்த்து, நோயை பேணி ,மீள முடியாத விளைவு நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொண்டால்

சர்க்கரை நோயற்ற அடுத்த தலைமுறையை உருவாக்கிடுவது எளிது !!

முத்தாய்ப்பாக ..!

அனுதினமும் இவ்வனைத்து விளக்கத்தையும் கேட்டுவிட்டு கடைசியாக ஒவ்வொரு சர்க்கரை நோயாளியும் கேட்கும் ஓர் விசேஷமான கேள்வி 🗣❓

சார்.
சுகர் மாத்திரை💊 போட்டால் சைட் எபெக்ட் ( Side_effects) அதிகமாகி கிட்னி பாதிப்பெல்லாம் வருதாமே சார் ⁉

அதற்கு என் கனிவான பதில் ,😬

சுகர் மாத்திரை💊 போட்டால் 10 அல்லது 15 வருடங்கள் கழித்து வரும் நான் மேலே கூறிய இவ்வகை விளைவு நோய்கள் மருந்து உண்ணாமல் தான்தோன்றி தனமாக இருந்தால் 5 வருடத்திலேயே வரலாம் ..!

இதற்கு காரணம் மருந்தல்ல !!👎🏼

அந்த கொடிய நோய் மட்டுமே !! ⛏

Dr.Safi.👨🏻‍⚕
Nagercoil.

ஆக,
மேற்கூறிய 10 விடைகளுக்குள் பெரும்பாலான சர்க்கரை நோய் பற்றிய விளக்கங்களை குறிப்பாக கொடுத்திருக்கிறேன் ..!

நீங்கள் அறிந்த இந்த செய்தியை உங்களை போன்றே மற்றவர்களும் அறிந்து பயன்பெற இந்த தொகுப்பை அதிகமாக பகிருங்கள் ,

வாழ்க நீரிழிவற்ற வாழ்வுடன் !!

நேர்காணல்: செல்வமுரளி