சென்னை:

மிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் மாதம் 3ந்தேதி கோலாகலமாக நடைபெற இருக்கிறது.

திமுக தலைவராக இருக்கும் கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையின் வைர விழாவும், அவரு டைய பிறந்தநாள் விழாவும் ஒருசேர கொண்டாட திமுக முடிவு செய்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் 13 தடவை போட்டியிட்டு, அனைத்து தேர்தலிலும் வெற்றிபெற்று 60 ஆண்டுகாலம் சேவையாற்றிய திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழா வரும் பிறந்தநாளன்று கொண்டாப்படுகிறது.

நாட்டின் தற்போதைய அரசியல்வாதிகளில் மூத்த அரசியல்வாதியாக திகழ்பவர் திமுக தலைவர் கருணாநிதி. வரும்  ஜூன் 3-ம் தேதி தனது 94-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.

இந்நிலையில், ஜூன் 3-ம் தேதி கருணாநிதி அரசியல் வைரவிழா நடைபெறவுள்ளதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த பிரமாண்ட விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார்  உள்பட  நாடு முழுவதும் இருந்து முன்னாள் முதல்வர்கள், தற்போதைய முதல்வர்கள், கட்சி தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக கூறி உள்ளார்.

 

மேலும்,   “ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக தான் வெற்றி பெறும் என உளவுத்துறை மூலம் தெரிந்ததால் ஏதேதோ காரணங்கள் கூறி இடைத்தேர்தலை நிறுத்திவிட்டார்கள்.

மக்கள் ஒரே ஒரு வாக்களித்து மூன்று முதல்வர்களை பார்த்துவிட்டார்கள்.

தமிழகத்தில் இனி இடைத்தேர்தல் அல்ல, பொதுத்தேர்தல் தான் வரப்போகிறது.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.