திருமண தம்பதியர்களுக்காக ரூ.4 லட்சம் மதிப்பிலான வைர முககவசம் தயாரிக்கும் சூரத் வியாபாரி…

சூரத்:

குஜராத் மாநிலம் சூரத்தில் திருமண தம்பதியர்களுக்காக திருமணவைர முககவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் வியாபாரி ஒருவர். சுமார் ரூ. ஒன்னரை லட்சம் மூதல் ரூ.4 லட்சம் வரை மதிப்பில் தங்கம், வைரம் கொண்டு முகமூடியை தயாரித்து வருகிறார்.

வைரத்துக்கு பட்டை தீட்டும் தொழிலில் முதலிடம் வகிப்பு குஜராத் மாநிலம். தற்போது கொரோனா ஊரடங்கால் அங்கு ள்ள பெரும்பலான தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், வருமானத்துக்கு வழியில்லாத சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்க அத்தியாவசியத் தேவையான முகக்கவசம் தயாரிப்பதில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே ஆடைகளுக்கு ஏற்றவாறு முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், செல்வந்தர் ஒருவர், தனது குடும்ப திருமணத்திற்கு வைரத்திலான முகக்கவசம் வேண்டி சூரத் வைரத் தொழிற்சாலை நிர்வாகத்தை நாடியுள்ளார். இதையடுத்து வைரத்திலான முகமூடி தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற வைர முகக்கவசத்தை விற்பனை செய்து வரும் நகைக் கடையின் உரிமையாளர் தீபக் சோக்ஸி கூறும்போது,  ஒரு வாடிக்கையாளர் தன்னிடம் வந்து மணமகனுக்கு ஒரு தனித்துவமான முகமூடியைக் கோரிய போது, வைரத்திலான முகமூடி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, தங்கம், வைரத்திலான  முகமூடிகளைத் தயாரிக்க எங்கள் வடிவமைப்பாளர் களிடம் நாங்கள் ஒப்படைத்தோம். அவர்கள் தயாரித்த முகமூடி எங்களது வாடிக்கையாளருக்கு முகவும் பிடித்திருந்தது. இதையடுத்து, நாங்கள் பரந்த அளவிலான முகமூடிகளைத் தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளோம். சில செல்வந்தர்கள் இதுபோன்ற முகமூடிகைள திருமணத்தின் போது மணமக்கள் அணிவதற்காக வாங்கிச் செல்கின்றனர் என்று தெரிவித்து உள்ளார்.

இந்த முகமூடிகளை தயாரிக்க தூய வைரமும் தங்கத்துடன் கூடிய அமெரிக்க வைரமும் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறிய வியாபாரி,  இந்த முகமூடிகளில் பயன்படுத்தப்படும்  துணி பொருள் அரசாங்க வழிகாட்டுதல்களின்படி பயன்படுத்தப்படுகிறது.

அதே வேளையில்,  வாடிக்கையாளர்கள் விரும்பினால் இந்த முகமூடிகளில் இருந்து வைரங்கள் மற்றும் தங்கத்தையும் வெளியே எடுத்து பாதுகாப்பா வைக்கும் வகையில் இந்த முகமூடி உருவாக்கப்பட்டுஉள்ளது. இதன் விலை ரூ .1.5 லட்சம் முதல்  ரூ .4 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது என்று கூறினார்.

கார்ட்டூன் கேலரி