நிரவ் மோடி : வைரங்களின் மதிப்பை 10 மடங்கு உயர்த்தி கணக்கு பதிவு

சூரத்

நிரவ் மோடியின் கூட்டாளியான மெகுல் சோக்சியின் நிறுவனத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ. 1.06 கோடி மதிப்புள்ள உண்மை மதிப்பு ரூ. 10 லட்சம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13000 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு நிரவ் மோடி தனது கூட்டாளி மெகுல் சோக்சி மற்றும் குடும்பத்தினருடன் நாட்டை விட்டு தப்பி ஓடியது தெரிந்ததே.    குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் உள்ள வைர நகை தொழிற்சாலை ஒன்று நிரவ் மோடியின் கூட்டாளி மெகுல் சோக்சியால் நிர்வாகிக்கப்பட்டு வந்தது.

இங்கு சோதனை இட்ட சிபிஐ வைரங்களைக் கைப்பற்றியது.   அங்குள்ள பணியாளர்கள் இந்த வைரங்களின் மதிப்பு ரூ.1.06 கோடி என தெரிவித்தனர்.   நிறுவனத்தின் கணக்குப் புத்தகங்களிலும் அந்த வைரங்களின் மதிப்பு அவ்வாறே குறிப்பிடப் பட்டிருந்தது,.    அந்த வைரங்களை மதிப்பிட சிபிஐ  மதிப்பீட்டாளர்களிடம் அளித்தது.   மதிப்பீட்டில் அந்த வைரங்களின் உண்மையான மதிப்பு ரூ. 10 லட்சம் மட்டுமே என தெரிய வந்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சிபிஐ நோட்டிஸ் அனுப்பி உள்ளது.   வைரங்களின் மதிப்பை உயர்த்திக் காட்டியது குறித்து இந்த வார இறுதியில் விசாரணை உள்ளதாகவும் அதற்கு அவர்கள் வர வேண்டும் எனவும் நோட்டிசில்  குறிப்பிடப் பட்டுள்ளது.