பூமியில் விழுந்த விண்கல்லில் வைரம் இருப்பது கண்டுபிடிப்பு

நியூயார்க்:

2008ம் ஆண்டு விண்கல் ஒன்று சூடான் பாலைவன பகுதியில் வெடித்து சிதறி விழுந்தது. இந்த விண்கல் சூரியனை சுற்றிக் கொண்டிருந்த கிரகங்களின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரகத்தில் இருந்து வெடித்து சிதறிய ஒரு பகுதியை சூடான் கார்டோம் பல்கலைக்கழக மாணவர்கள் ஆராய்ச்சி செய்தனர். அப்போது அந்த விண்கற்களின் உள்பகுதி முழுவதும் சிறிய அளவிலான வைரக்கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கிரகம் வெடித்தபோது வைரம் உருவாக வாய்ப்பு இல்லை. அதற்கு முன்பே அதில் வைரம் இருந்திருக்க வேண்டும். அவை தூய்மையான வைரங்கள். இதுபோன்ற வைரத்தை இதற்கு முன்பு பார்த்தது கிடையாது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய வைரம் பூமி தோன்றுவதற்கு முன்பே உருவாகியிருக்க கூடும். நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சூரிய குடும்பம் உருவானபோது இந்த விண்கல் உருவாகியிருக்க வேண்டும். பூமி உருவான அதே நாளில் இந்த விண்கல்லும் தோன்றியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.