போலி வென்டிலேட்டர்களால் 300-க்கும் மேற்பட்ட கொரோனா உயிரிழப்புகள் நடந்ததா?- காங்கிரஸ் கேள்வி

குஜராத்:

குஜராத்தில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயளிகளுக்கு சிகிச்சை அளிக்க போலி வென்டிலேட்டர்கள் பொருத்தப்பட்டால் 300-க்கும் மேற்பட்ட கொரோனா உயிரிழப்புகள் நடந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி தலைமையிலான பாஜக அரசு மீது கடும் குற்றச்சாட்டை தொடுத்துள்ள காங்கிரஸ், அரசு மருத்துவமனைகளில் பொருத்தப்பட்ட போலி வென்டிலேட்டர்களே 300-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் அமித் சவ்தா, அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் 300 க்கும் மேற்பட்ட கொரோனா உயிரிழப்புகளுக்கு முதலமைச்சர் ரூபானியின் நண்பரால் நடத்தப்படும் ஒரு நிறுவனம் தயாரிக்கும் போலி வென்டிலேட்டர் தமன் -1 உடன் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று கண்டுபிடிக்க நீதி விசாரணை உத்தரவிட வேண்டும் என்றுகோரிக்கை விடுத்துள்ளார்.

இதுவரை, இந்த வென்டிலேட்டர்களில் 900 குஜராத் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ளன. இதில் 230 வென்டிலேட்டர்கள், அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் உள்ளன.  குஜராத்தில் இதுவரை 719 இறப்புகளும், 12 ஆயிரத்து 140 கொரோனா பாதிப்புகளும் உள்ள்தாக தெரிய வந்துள்ளது.

தமன் -1 வென்டிலேட்டர் மூலம் எத்தனை நோயாளிகளுக்கு சோதனை நடத்தப்பட்டது?

அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட கொரோனா உயிரிழப்புகள், போலி வென்டிலேட்டர்களைப் பயன்படுத்துவதால் ஏற்பட்டதா? என்ற கேள்விக்கு அரசாங்கத்திடம் எந்த பதிலும் வரவில்லை என்று குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் அமித் சவ்தா தெரிவித்துள்ள்ளார்.

இந்த போலி வென்டிலேட்டர்களுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் (டி.சி.ஜி.ஐ) உரிமம் உள்ளதா என்பதையும், இந்த வென்டிலேட்டர்களால் இதுவரை எத்தனை பேருக்கும் சோதனை நடத்தப்பட்டது என்பதையும் அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் அமித் சவ்தா கேட்டு கொண்டார்.

தமன் -1 க்கு டி.சி.ஜி.ஐ அனுமதி இல்லை என்ற உண்மையை அகமதாபாத்தில் இருந்து வெளியாகும் பத்திரிகை செய்தியின் மூலம் தெரிய வந்துள்ளது.

ஏப்ரல் 5 ம் தேதி இந்த வென்டிலேட்டர்களை முதல்வர் விஜய் ரூபானியால் அறிமுகம் செய்வதற்கு முன்பு, ஒரே ஒரு நபருக்கு மட்டுமே சோதனை செய்யப்பட்டதாகவும் சவ்தா கூறினார்.

குஜராத்தில் எத்தனை மருத்துவமனைகள் போலி வென்டிலேட்டரைப் பயன்படுத்துகின்றன. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தமன் -1 மற்றும் தயாரிப்பு விளம்பரத்திற்காக அரசாங்கம் செய்த செலவுகள் பற்றிய தரவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அவர் அரசாங்கத்திடம் கேட்டார்.

தமன் -1 வென்டிலேட்டர்கள், ராஜ்கோட்டை மையமாக கொண்ட ஜோதி சி.என்.சி நிறுவனம் தயாரித்துள்ளது. அதன் தலைவரும் நிர்வாக இயக்குநருமான பரக்ராம்சிங் ஜடேஜா ரூபானியின் நண்பர் என்று கூறப்படுகிறது.

இந்த அரசாங்கம், கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழ்நிலையில், தயாரிப்பை பரிசோதித்து, உயிர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டுமே தவிர, போலி வென்டிலேட்டர்களை பயன்படுத்த அனுமதித்திருக்க கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினையை தெரிவிக்க குஜராத் ஆளுநரையும் நாங்கள் சந்திக்க உள்ளோம் என்றும், இது குறித்து காவல் துறையில் புகார் அளிப்பது கடைசி முயற்சியாக இருக்கும் என்றும் குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் அமித் சவ்தா தெரிவித்துள்ள்ளார்.

You may have missed