சென்னை: நடிகர் விஜய் கட்சி பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததாக செய்கிள் பரவிய நிலையில்,தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தனது படத்தில் அவ்வப்போது, தமிழக அரசியல் கட்சிகளுக்கு எதிராக பஞ்ச் டயலாக் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அவர் அரசியலுக்கு வந்து மக்கள் சேவையாற்ற வேண்டும் என அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பிகில் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் விஜய்,  அரசியலில் புகுந்து விளையாடுங்கள், ஆனால், விளையாட்டில் அரசியல் வேண்டாம் எனவும், யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அவரை அங்க உட்கார வைத்தீர்கள் என்றால், அனைத்தும் சரியாக இருக்கும் எனவும் விஜய் சூசகமாக கூறினார். அவரது எகருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல்  இன்னும் 6 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில்,  கடந்தவாரம் செய்தியாளர்களிடம் பேசிய விஜயின் தந்தை  தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் ,  அது எந்த நேரத்திலும் நடக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். இதுதொடர்பாக,  நடிகர் விஜய் தனது பனையூர் இல்லத்தில்  மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பெயரும் இந்திய தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவின. இது அவரது ரசிகர்கள் பதில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. சமூக வலைதளங்களிலும், இது தொடர்பாக கருத்துக்கள் பரிமாற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நடிகர் விஜய் அரசியல் கட்சி பதிவு என வெளியான செய்தி தவறு என அவரது பிஆர்ஓ மறுப்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பாக செய்திகள் பரவியது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது