அமித்ஷா உணவு அருந்தியது சாலை ஓர உணவகமா? ஸ்டார் ஓட்டலா? : டிவிட்டரில் சர்ச்சை 

துராந்தகம்

த்திய அமைச்சர் அமித்ஷா நேற்று மதுராந்தகத்தில் உணவு அருந்திய ஓட்டல் குறித்து டிவிட்டரில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.

தேர்தல் பரப்புரைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தமிழகம் வந்தார். அப்போது அவர் மதுராந்தகத்தில் சாலையோர உணவகத்தில் உணவருந்தியதாகச் செய்திகள் வந்தன.  இதைத் தமிழக பாஜக பிரபலமான வானதி சீனிவாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிந்து இது கடின உழைப்புக்கும் எளிமைக்கும் உதாரணம் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகைப்படங்கள் பலராலும் பகிரப்பட்டதுடன் பல கேள்விகளை நெட்டிசன் மனதில் எழுப்பி உள்ளது.

இது குறித்து தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் ராம சுகந்தன் தனது டிவிட்டரில்,

தேனீர் கோப்பையைப் பார்த்தால் சாலையோர கடை மாதிரி தெரியவில்லை மேற்கு வங்காளத்தில் ஏழை தொண்டர்கள் வீட்டில் சாப்பிடுவது மாதிரி 5 ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு சாப்பிடுவார் . இங்கு யார் வீட்டிலோ செய்த உணவை சாலை ஓரமாக உட்கார்ந்து சாப்பிட்ட நாடகம் !

எனப் பதிந்துள்ளார்.

அது மட்டுமின்றி இதில் அமித்ஷா உள்ளிட்ட முக்கியமான தலைவர்களுக்கு தனியான விரிப்புக்களுடன் கூடிய மேஜை மற்றுமுள்ள தலைவர்களுக்குச் சாதாரண மேஜை என்பதும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

மேலும் மற்றொரு நெட்டிசன்,

நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட அனைத்து உணவகங்களும் சாலை ஓரத்தில் தான் இருக்கும்.  எதுவுமே சாலையின் நடுவில் இருக்காது

என மேலும் கிண்டல் செய்துள்ளார்.