லுக் அவுட் நோட்டிஸ் தளர்வு : சிபிஐ இணை இயக்குனர் ஏர் செல் சிவசங்கரனை சந்தித்தாரா ? : 

டில்லி

ர்செல் முன்னாள் நிர்வாகி சிவசங்கரனின் லுக் அவுட் நோட்டிசை தளர்த்தும் முன்பு சிபிஐ இணை இயக்குனர் அவரை சந்தித்தகாக தகவல்கள் வந்துள்ளன.


ஐடிபிஐ வங்கியில் ரூ. 600 கோடி மோசடி செய்ததாக ஏர்செல் முன்னாள் நிர்வாகி சிவசங்கரன் மீது வழக்கு நிலுவையில் உள்ளதால் அவருக்கு சிபிஐ லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பித்தது. ஏர்செல் சிவசங்கரன், ஐடிபிஐ இயக்குனர், உள்ளிட்ட பலர் இந்த வழக்கில் செக்கபட்டுள்ளனர்., சிவசங்கரனை விசாரணைக்கு இந்தியா வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தற்போது சிஷெல்ஸ் நகர குடியுரிமை பெற்றுள்ள சிவசங்கரனுக்கு அலுவலக பணிகள் உள்ளதால் இந்தியா வந்தால் திரும்ப வசதியாக லுக் அவுட் நோட்டிஸ் தளர்த்தப்பட்டது. தற்போது இந்த லாக் அவுட் நோட்டிஸ் தளர்த்தப் பட்டது குறித்து புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது. அவரை சிபிஐ இணை இயக்குனருக்கு சமமான பதவியில் உள்ள அதிகாரி ஒருவர் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சந்திப்பு சிவசங்கரனின் அலுவலகத்திலும் அதன் பிறகு ஒரு 5 நட்சத்திர விடுதியிலும் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த சந்திப்புக்கு பின்னரே லுக் அவுட் நோட்டிஸ் தளர்த்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சிபிஐ குறித்து ஏற்கனவே சர்ச்சைகள் உள்ள நேரத்தில் இவ்வாறு ஒரு தகவல் வெளியானது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.