சென்னை

நீட் விலக்கு, 7 பேர் விடுதலை உள்ளிட்ட தமிழக பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் முதல்வர் பேசினாரா என திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று பிரதமர் மோடி சென்னைக்கு வந்து பல மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார்.  இந்த விழாவில் அவருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் உள்ளிடோர் கலந்துக் கொண்டனர்.   மோடி நேற்று மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் போது ஔவையார் பாடலை மேற்கோள் காட்டி உரையாற்றினார்.

நேற்று திமுக சார்பில் நாகை மற்றும் தஞ்சை மாவட்டங்களுக்கான உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பரப்புரை கூட்டம் பூம்புகாரில் நடந்தது.  இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கலந்துக் கொண்டு மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.   அதன் பிறகு மு க ஸ்டாலின் மக்களிடையே உரையாற்றினார்.

ஸ்டாலின் தந்து உரையில், “அதிமுக அரசு கமிஷன் பெற்றே தமிழகத்துக்கு ரூ.5 லட்சம் கோடி கடனை ஏற்படுத்தி உள்ளது.   தமிழகத்துக்கு மத்திய அரசிடம் இருந்து பெற்ற திட்டங்கள் குறித்து முதல்வரால் பட்டியல் இட முடியுமா?  இது வரை எத்தனை திட்டங்கள் மத்திய அரசு தமிழகத்துக்கு அளித்துள்ளது? பிரதமர் மோடி வெறும் ஷோ காட்டுகிறார்.

நான் மதுரையில் எய்ம்ஸ் எங்கே எனக் கேட்கிறேன்.  தமிழக முதல்வர் எய்ம்ஸ் குறித்து கேள்விகள் எழுப்புவாரா?  பிரதமர் மோடியிடம் தமிழக பிரச்சினைகளான நீட் விலக்கு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை போன்றவை குறித்து முதல்வர் ஏதும் கேள்விகள் கேட்டாரா?” எனக் கேள்விகள் எழுப்பி உள்ளார்.