அணை திறப்பு நிகழ்ச்சியில் சுமலதா இடுப்பை பிடித்தாரா எடியூரப்பா? வைரல் வீடியோ…

பெங்களூரு:  கர்நாடக மாநிலத்தில், கேஆர்எஸ் அணை நிரம்பிய நிலையில், அதில் தண்ணீர் திறப்பதற்காக நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியில் முதல்வர் எடியூரப்பா, மாண்டியா தொகுதி எம்.பி.யான சுமலதாவின் இடுப்பை பிடித்தது சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

மண்டியா தொகுதியில் கன்னட நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரீஷ் காலமானதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், அம்பரீஷ் மனைவியும், நடிகையுமான சுமலதா, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ளார்.

தற்போது கர்நாடகாவில் பெய்து வரும் மழைகாரணமாக அங்குள்ள கேஆர்எஸ் அணை நிரம்பி உள்ளது. இதையடுத்து, அங்கிருந்து காவிரி நதிக்கு தண்ணீர் திறந்து விடும் விழாவான  ‘பாகினா’ வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் எடியூரப்பா கலந்துகொண்ட நிலையில், அவருடன் மாண்டியா தொகுதி எம்.பி.யான சுமலதாவும் கலந்துகொண்டார்.

விழாவின்போது, அணைக்கு பூஜை செய்து மலர்களை தூவும் வேளையில், அருகே நின்று கொண்டிருந்த சுமலதாவின் இடுப்பை முதல்வர் எடியூரப்பா பிடிக்கும் காட்சியும், அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்கும் காட்சி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, முதல்வர் எடியூரப்பாவிடம் மனு வழங்கினார். அதில்,  “கே.ஆர்.எஸ்ஸைச் சுற்றியுள்ள சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்து உள்ளார்.

நன்றி: வீடியோ – சத்யம் டிவி