மின்சாரம் பயன்படுத்த மக்களுக்கு பணம் வழங்கியதா ஜெர்மனி

ஜெர்மனியிடம் அதிக புதுப்பிக்கத் தக்க ஆற்றல்(renewable energy) இருப்பதால் மே மாதத்தில் முதல்  ஞாயிறன்று மக்கள் மின்சாரத்தைப் பயன்படுத்த அவர்களுக்குப் பணம் வழங்கியது.

மே 8 ம் தேதி, ஞாயிறன்று, புதுப்பிக்கத் தக்க சக்தி உருவாக்குவதில் ஜெர்மனி ஒரு புதிய உயரத்தை எட்டியது. நாட்டின் சூரிய, காற்று, நீர் மற்றும் உயிரி தாவரங்கள் கிட்டதட்ட 87% மின்சக்தியை வழங்கிக் கொண்டிருந்தது.

மின்சாரத்தின் விலை உண்மையில் பல மணி நேரத்திற்கு எதிர்மறையாக(negative) இருந்தது அதாவது மின்சாரத்தை உபயோகப்படுத்த வாடிக்கையாளர்களுக்குப் பணம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, சராசரி புதுப்பிக்கத் தக்க ஆற்றல்  33% என்று அகோரா எனர்ஜிவெண்டெ என்ற ஒரு ஜெர்மன் சுத்தமான எரிசக்தி அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அடுத்து வரும் புதிய காற்றாலை மின்சக்தி அதை இன்னும் அதிகரிக்க செய்யும்.

சூரியன் தோன்றி மறையும் போது, காற்று எழுந்து வீழும் போதும் புதுப்பிக்கத் தக்க சக்தி உற்பத்தி ஆகிக் கொண்டே தான் இருக்கும் இன்று விமர்சகர்கள் கூறினார்கள். 2050 ஆம் ஆண்டில் ஜெர்மனி 100 சதவிகித புதுப்பிக்கத் தக்க சக்தியை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது, மற்றும் டென்மார்க் காற்றாலைகள் ஏற்கனவே நாடு உபயோகப்படுத்தும் அளவைக் காட்டிலும் அதிகமாக மின்சக்தியை உற்பத்தி செய்கின்றது, அதனால் உபரி மின்சக்தியை ஜெர்மனி, நார்வே மற்றும் ஸ்வீடன் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

ஆனால் ஜெர்மனியில் 15% புதுப்பிக்கத் தக்க மின்சக்தி மட்டுமே உள்ளது.
காற்று மற்றும் சூரிய சக்தி உற்பத்தி மட்டுமே மேலே குறிப்பிடப்பட்ட எதிர்மறை மொத்தவிலையை உருவாக்க முடியாது.
நெகடிவ் விலை என்பது பேஸ்லோட் மின்சக்தி உற்பத்தி நிலையங்களினால் உருவானது. அனுஉலை மின் சக்தி என்பது முக்கியமான பேஸ்லோட் ஆகும் மற்றும் அது மற்ற மின்சார உற்பத்தியுடன் உடன்படாது.
எனவே தண்ணீர் – என்ணை போன்று தான் அனு சக்தியும் , சூரிய சக்தியையும் இணைக்க முடியும்.
நூறு சத புதுப்பிக்கத் தக்க மின்சக்தி என்பது மிகப்பெரும் சவாலாகும். ஜெர்மனியில் 20% மட்டுமே காற்றாடி மற்றும் சூரிய மின்சக்தி உள்ளது.
அனு மின்சக்தி தயாரிப்பு 2022ல் முற்றிலும் விலக்கப்பட்ட பிறகு பேஸ்லோட் (அடிப்படை சுமை)குறைக்க வழிகிடைக்கும்.