2019 ல் நிதின் கட்கரி வரையறுத்ததை மீண்டும் வழிமொழிந்தாரா நிர்மலா சீதாராமன் ?

--

டெல்லி :

2019 ம் ஆண்டு அக்டோபர் மாதம் MSME குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறிய வரைமுறைகளை, நிர்மலா சீதாராமன் வழிமொழிந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நிர்மலா சீதாராமன் இன்று கூறியது என்ன

நிர்மலா சீதாராமன் இன்று சிறு,குறு,நடுத்தர தொழில் நிறுவனங்கள் குறியீடு மாற்றி அமைக்கப்படுகிறது என்று ஒரு அறிவிப்பு செய்தார்.

அதன்படி முதலீட்டின் படி நிர்ணயம் செய்யப்பட அளவுகோல் இனி வருவாய் மூலம் நிர்ணயம் செய்யப்படும் என்று அறிவித்தார்.

மேலும் அவர் உற்பத்தி நிறுவனங்களையும் சேவைத்துறை நிறுவனங்களையும் ஒன்றிணைத்து சமமாக பார்க்கப்படும் என்று அறிவித்தார்.


இந்த அறிவிப்பினை 2019 ஆம் ஆண்டு அக்டோபர்மாதம் நிதின் கத்காரி அறிவித்திருந்தார்.. இந்த மாற்றத்தை மத்திய அரசு திருத்தும் செய்து விட்டதாக அவர் சொல்லியிருந்தார்

நிதின் கட்கரி கூறியது என்ன

மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் திருத்தப்பட்ட வரையறை வரிவிதிப்பு, முதலீடு மற்றும் பலவற்றுக்கான ஒருங்கிணைந்த விளக்கத்தை கடந்த 2019 ம் ஆண்டு அக்டோபரில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இந்திய நிறுவனங்களுக்கான வணிக சூழ்நிலையை மேலும் செம்மைப்படுத்தக்கூடிய ஒரு திருத்தத்தின் மூலம் வரையறை செயல்படுத்தப்பட உள்ளது.

MSME களை “ஆலை மற்றும் இயந்திரங்களில் முதலீடு” செய்வதிலிருந்து “வருடாந்திர வருவாய்” என வகைப்படுத்துவதற்கான அளவுகோல்களை மாற்றுவதற்கான திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தது.

இப்படியாக ஏற்கனவே இருக்கின்ற திட்டங்களை திரும்ப புது அறிவிப்பு என்கின்ற பெயரில் அறிவித்து இவர்கள் செய்யும் செயல் இவர்கள் உண்மையிலேயே பொருளாதாரம் மற்றும் தொற்று நோய் குறித்து புரிந்து வைத்து இருக்கீரார்களா என்ற சந்தேகம் எழுவதாக சமூக வலைத்தளங்களில் கேள்வியெழுப்பி வருகின்றனர்

 

https://razorpay.com/learn/new-msme-definition-turnover-2019/

You may have missed