காதலை சொல்ல தைரியம் வரவில்லை.. மனம் திறக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்..

பிரபல ஆங்கில இதழின் சென்னை பதிப்பு வாசகர்கள் 2019-ம் ஆண்டின் மிகவும் விரும்பத்தக்க பிரபலமாக நடிகர் சிவகார்த்திகேயனை தேர்ந்தெடுத்துள்ளனர்.

இதையடுத்து அந்த பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் சிவகார்த்திகேயன் சில சுவாரஸ்யமான விஷயங்களை தெரிவித்துள்ளார்.

” மிகவும் விரும்பத்தக்க பிரபலமா தேர்ந்தெடுக்கப்பட்டதை இன்னும் என்னால நம்ப முடியல. என் மேனேஜர் வந்து விசயத்தை சொன்னப்ப, நம்பாம என் பிரண்ட் தர்ஸன்ட்ட (கனா புகழ்) கேட்டு கன்பார்ம் பண்ணிக்கிட்டேன். ஏன்னா போன வருசம் இந்த டைட்டிலை அனிரூத் வாங்கியிருந்தார். அந்த வரிசையில் நானானு ஆச்சர்யம் ஆயிடுச்சு. நான் அப்டி ஒன்னும் அழகானவனும் இல்ல. எனக்குன்னு தனிப்பட்ட ஸ்டைல் கூட ஏதுமில்ல. அப்டியிருந்தும் என்னை தேர்ந்தெடுத்திருக்காங்கன்னா மக்கள் நான் நானாக இருப்பதையே விரும்புறாங்கனு நினைக்கிறேன்.

இந்த விருது அளிக்கப்பட்ட விசயத்தை என் மனைவிகிட்ட நான் சொல்லவே இல்ல. சர்ப்ரைஸா பேப்பர்லயே பாத்து தெரிஞ்சுக்கட்டு சந்தோசப்பட்ட்டும்னு விட்டுட்டேன். ஏன்னா எல்லோரும் என்னை காமெடியனா பார்த்தப்போ என்னை ஹீரோவா பார்த்த ஒரே ஜீவன், என் மனைவி ஆர்த்திதான். அதனால இது ஒரு திரில்லா இருக்கட்டுமேனு தான்.

பெண் ரசிகர்கள் தேடி வந்து பாக்குறளவுக்கு ரொமாண்டிக் ஹீரோலாம் இல்லீங்க நானு. பெண் ரசிகர்கள் அனுப்புற மெசேஜையெல்லாம் படிக்கும் போது ரொம்ப கூச்சமா இருக்கும்.

முதல் காதல், நான் காலேஜ் படிக்கும் போது நிகழ்ந்த ஒன் சைட் லவ். நான் ஸ்கூலிங் எல்லாமே ஒன்லி பாய்ஸ்தான். முதன்முதலாக காலேஜ்ல கோயெட்ங்கிறதால ரொம்ப புதுசா இருந்தது. அவங்கள பார்த்த முதலா அவங்க மேல எனக்கு அப்டி ஒரு தீவிரமான கிரேஸ். ஆனா தைரியமோ போய் சொல்ல தயக்கம். இப்போ நினைச்சு பார்த்தாதான் புரியுது அது வெறும் இன்ஃபேக்சுவேஷன்னு. ஆனா இப்போ அவங்க இன்னொருத்தர்கூட கல்யாணம் ஆகி செட்டில் ஆகிட்டாங்க.

என் மனைவியை நான் ரொம்ப நேசிக்கிறேன். ஆனா 2013-லனு நினைக்கிறேன். நான் ஆர்த்தியை டைவர்ஸ் பண்ண போறதா ஒரு வதந்தி பரவிச்சி. அப்போ அவங்க ஏழு மாத கர்ப்பிணி. நான் வதந்திய பத்தி கவலைப்படல. ஆனா அதை பரப்பிய நேரம் தான் ரொம்ப வருத்தப்பட வெச்சிடுச்சு. அவங்களுக்குக்கும் இது ரொம்ப அப்செட்டான விஷயமாகிடுச்சு. ஆனா நான் கவலைப்படுவேன்ங்கிறதால அதை அவங்க வெளிக்காட்டிக்கல. உண்மையைச் சொல்லப் போனா அந்த வதந்தி கிளிப்பிங்கை கொண்டு வந்து எங்கிட்ட முதன்முதலா காட்டியதே அவங்க தான்.

-லட்சுமி பிரியா