மும்பை: 2019-20ஆம் ஒரு 2000 ரூபாய் நோட்டுக்கூட அச்சடிக்கவில்லை என்றும், ரூ.2 ஆயிரம் புழக்கம் எப்படி உள்ளது என்பது குறித்து  ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டு உள்ளது.
பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம், தேதி இரவு பணமதிப்பிழப்பு திட்டத்தை அறிவித் தார். அதன்படி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து புதிய ரூ.2ஆயிரம் நோட்டுக்கள் வெளியிடப்பட்டது.
பழைய நோட்டுக்களைக் கொடுத்து புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை பெற்றவர்கள் சில்லரையை மாற்ற முடியாமல் தவித்தனர். ரூபாய் நோட்டுகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.  மக்கள் படாதபாடு பட்டனர்.  ஆனால், மக்களைப் பற்றி மோடி அரசு எந்தவித கவலையும் கொள்ளாமல், கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என்று கூறி வந்தது.
இந்தநிலையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2ஆயிரம் நோட்டுக்கள் புழக்கம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில்,  2019-20ம் ஆண்டோடு புதிய 2,000 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது என்று தெரிவித்து உள்ளது.
கடந்த 2018 மார்ச் மாதம் நிலவரப்படி  33,632 லட்சம் எண்ணிக்கையிலான 2 ஆயிரம்  ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாக தெரிவித்துள்ள அறிக்கை,  இது 2019-ம் ஆண்டு மார்ச் மாதத் தில் 32,910 லட்சம் எண்ணிக்கையிலான நோட்டுகளாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளது. அதுவே,   2020-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி 27,398 லட்சம் எண்ணிக்கையிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக கூறி உள்ளது.
இந்த நோட்டின் எண்ணிக்கை  2018 மார்ச்சில் 3.3 சதவீதம் இருந்ததாகவும்,  2019-ம் ஆண்டு மார்ச் முடிவில் 3 சதவீதமாகக் குறைந்து வந்ததாகவும், நடப்பாண்டு (2020)  ஆண்டு மார்ச் முடிவில் 2.4 சதவீதம் அளவாக குறைந்து விட்டது என்று தெரிவித்து உள்ளது.
மேலும் 2019-20ம் ஆண்டில் புதியதாக 2 ஆயிரம்  ரூபாய் நோட்டு அச்சடிக்க  எந்தவொரு  ஆர்டரும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளது  ரிசர்வ் வங்கி.
ரூ.500 நோட்டுகளைப் பொறுத்தவரை 2018-19ல் 1,169 கோடி எண்ணிக்கையில் அச்சடிக்க ஆர்டர் தரப்பட்டு இருப்பதாகவும்,  1,147 கோடி நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

2019-20ம் ஆண்டில் ரூ.100 நோட்டுகள், 330 கோடி எண்ணிக்கையிலும், ரூ.50 நோட்டுகள் 240 கோடி எண்ணிக்கையிலும், ரூ.200 நோட்டுகள் 205 கோடி எண்ணிக்கையிலும், ரூ.10 நோட்டுகள் 147 கோடி எண்ணிக்கையிலும், ரூ.20 நோட்டுகள் 125 கோடி எண்ணிக்கையிலும் அச்சடிக்க ஆர்டர் கொடுக்கப் பட்டது என்றும் வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

2019-20 ஆம் ஆண்டில்   2 லட்சத்து 96 ஆயிரத்து 695 எண்ணிக்கையிலாயன  போலி ரூபாய் நோட்டு கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், இவற்றில்,  4.6 சதவீதமம் ரிசர்வ் வங்கியிலும், பிற வங்கி களில் 95.4 சதவீதமும் பிற வங்கிகளிலும் கண்டறியப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

ரூ.20, ரூ.100, ரூ.2000 ஆகியவற்றில் கள்ள நோட்டுகள் அளவு முறையே 37.7 சதவீதம், 23.7 சதவீதம், 22.1 சதவீதம் குறைந்துள்ளது.

ரூ.2000 நோட்டுகளில் கடந்த 2018-19ஆம் ஆண்டில் 21,847 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கடந்த நிதியாண்டில் எண்ணிக்கை 17,020ஆக குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.