தமிழக தண்ணீர் பிரச்சினை குறித்து பேச்சு? பிரதமர் மோடியுடன் எடப்பாடி சந்திப்பு!

டில்லி:

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேசினார். அப்போது காவிரி பிரச்சினை உள்பட,  தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி பேசியதாக கூறப்படுகிறது.

5வது நிதி ஆயோக் கூட்டம் இன்று டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு டில்லி சென்றார். அவருடன் அதிமுக முன்னாள் எம்.பி. தம்பித்துரை, அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் உடன் சென்றனர்.

இந்த நிலையில், இன்று காலை  டெல்லியில்  பிரதமர் இல்லத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். அப்போது,  பிரதமர் மோடியுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில் தமிழகத்தின் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை வைக்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிகின்றன.மேலும் காவிரி பிரச்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி பேசியதாக தகவல் உள்ளது.

சுமார் 7 நிமிடங்கள் நடந்ததுள்ளது.பிரதமர் மற்றும் முதல்வர் பழனிசாமியின் சந்திப்பின்போது அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி