நாய் கடித்து விட்டதா? முதலில் செய்ய வேண்டியது என்ன…..

நாய் என்றாலே அனைவருக்கும் ஒருவிதமலான பயம் ஏற்படுவது இயற்கையே…. அது வளர்ப்பு நாயாக இருந்தாலும், தெருநாயாக இருந்தாலும், ஒருவரை பார்த்து குறைத்து விட்டால் தன்னை அறியாமலே உடல் நடுங்குவது அனைவரும் அறிந்திருப்போம்….

ஒவ்வோர் ஆண்டும் உலகெங்கும் 60 ஆயிரம் பேர் வெறி நாய்க்கடியால் இறந்து போகிறார்கள். இதில் இந்தியாவில் மட்டும் 20 ஆயிரம் பேர் நாய்க்கடியால் மரணத்தை  தழுவுவதாக ஆய்வுகள தெரிவிக்கின்றன. இதில் 50 சதவிகிதத்தினர் 15 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள். 5 முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் என ஆய்வுகள் கூறுகின்றன.

வீட்டில் வளர்க்கும் நாய், சிறிய குட்டி நாய், தெருநாய் என எந்த நாய் கடித்தாலும் அதன் பற்கள் நம் உடம்பில் கீறலை ஏற்படுத்துகிறது.  நாயின் வாயில் இருந்து சுரக்கும் உமிழ்நீர், அக்காயத்தின் வழியாக “ரேபிஸ்’ எனப்படும் வெறிநோய் கிருமிகளை உள்ளே செலுத்துகிறது. உடனே அதற்கு சரியான முதலுதவி செய்ய வேண்டும்.

ஏனெனில் நாயினுடைய பற்கள் உங்களுடைய தோல் திசுக்களைக் கவ்வியிருந்தாலும் மிகச்சிறியதாக பல் பட்டிருந்தாலும் அது ஆபத்து தான். அவை தோல் மற்றும் தசை திசுக்களில் பெருக்கமடைந்து மூளையை அடைகின்றன.

காயமடை யும் இடத்தைப் பொறுத்து, அக்கிருமிகள் வேகமாக அல்லது மெதுவாக மூளையை சென்று அடையும். அப்போது நோயின் பாதிப்பு உடனே ஏற்படும். கால்கள் எனில் மெதுவாகவும், கைகளில் கடித்தால் வேகமாக மூளையைச் சென்று அடையும்.

நாய்க் கடிதவுடன், வெறிநோய் கிருமிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். பின் அட்டவணைப்படி தடுப்பூசி அளிக்க வேண்டும். கடித்தது வெறிநாயாக இருந்தாலும், சாதாரண நாயாக இருந்தாலும் தடுப்பூசியை கண்டிப்பாக போட வேண்டும்.

ஏனெனில் நாம் வளர்க்கும் சாதாரண நாய், குட்டிநாய்க்கு வெறிநோய் (ரேபிஸ்) தாக்கம் இருப்பது நமக்கு தெரிய வாய்ப்பில்லை. நாய் கடிக்கு உடனடியாக சில மருத்துவ சிகிச்சைகள் செய்வது மிக அவசியமானது ஆகும்.

அந்தவகையில் மருத்துவமனைக்குச் செல்லும் முன் நீங்கள் உடனடியாகச் செய்ய வேண்டிய முதலுதவி  என்னென்ன என்பதை தெரிந்துகொள்வது நல்லது…

நாய் கடித்த காயமோ அதன் தடமோ உள்ள இடத்தில், விரல்களால் வைத்து மெல்ல அழுத்துங்கள்.

நாய் கடித்த இடத்தை மென்மையான சோப்பும் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர் கொண்டோ கழுவுங்கள்.

நாய் கடித்த இடத்திலிருந்து கட்டாயம் ரத்தம் நிண நீருடன் சேர்ந்து வடியும். சுத்தமான துணியைக் கொண்டு வடியும் ரத்தத்தைத் துடைத்து எடுங்கள்.

காயமுள்ள இடத்தை டெட்டால் கொண்டு, சுத்தமான துணியால் துடைத்துவிட்டு, அந்த இடத்தில் ஆன்டி- பயாடிக் க்ரீம் போட்டு விடுங்கள்.

ஆன்டி பயாடிக் க்ரீம் அப்ளை செய்தவுடன் அதன்மேல் சிறிது காட்டனை வைத்து, மேலே மெல்லியதாக ஒரு கட்டு போடுங்கள்.

குறைந்தது இரண்டு மணி நேரத்து ஒருமுறையாவது,அந்த கட்டை பிரித்து, மீண்டும் துடைத்துவிட்டு வேறு கட்டு போடுங்கள்.

கடித்த இடத்தில் வீக்கம், சிவந்து இருப்பது, வலி, அதனால் ஏற்படும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-