கர்நாடக அரசால் மறுக்கப்பட்ட இலவச சைக்கிள்கள் தமிழகத்தில் தரப்படுகிறதா ? புதிய சர்ச்சை

விழுப்புரம்

ர்நாடக மாநில அரசு மறுத்து அனுப்பிய தரமற்ற இலவச சைக்கிள்கள் தமிழகத்தில் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழக அரசு சார்பில் மேல் நிலை வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் என்னும் பெயரில் இலவச சைக்கிள்கள் ஆண்டு தோறும் வழங்கபட்டு வருகின்றன. இந்த திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். அதனால் இந்த சைக்கிள்களில் ஜெயலலிதாவின் படம் இடம் பெற்றிருப்பது வழக்கமாகும். அந்த வழக்கம் அவர் மறைவுக்குப் பின்னும் தொடர்ந்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் வழங்கி வருகிறார். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தழுதாளி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று அமைச்சர் 1500 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

அமைச்சர் வழங்கிய சைக்கிள்களில் புத்தகம் வைக்கும் இரும்புக்கூடையில் உள்ள ஸ்டிக்க்ரில் ஜெயலலிதாவின் படம் இல்லை. அதற்கு பதிலாக ஒரு மாணவின் படமும் கன்னட வாசகங்களும் இருந்தன. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியது.

அப்போது பரவிய தகவலின் படி கர்நாடக மாநில்ம் வழங்கும் இலவச சைக்கிள்கள் பல தரமற்று இருந்துள்ளன. அந்த சைக்கிள்களை கர்நாடக அரசு திருப்பி அனுப்பியதுட்ன் அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அந்த சைக்கிள்கள் விழுப்புரத்துக்கு அனுப்பப் பட்டிருக்கலாம் என மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், “தமிழக அர்சு வழங்கும் சைக்கிள்கள் தரமானவைகலெ ஆகும். இந்த சைக்கிள்களின் பாகங்கள் தனித்தனியாக பெறப்பட்டு அதன் பிறகு ஒன்றிணைக்கப்படுகின்றன. அதனால் முன் கூடை அளித்த நிறுவனம் க்ர்நாடகத்துக்கு அனுப்புவதற்கு பதிலாக தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது” என கூறி உள்ளார்.