“நீ பார்த்தியா.. ஆதாரம் இருந்தா காட்டு!” : வைரமுத்து மீதான புகாருக்கு பாரதிராஜா காட்டம்

MeToo பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நீ பார்த்தியா.. ஆதாரத்தை காட்டு என இயக்குநர் பாரதிராஜா காட்டமாக பதில் அளித்துள்ளார்.

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை ட்விட்டர் தளத்தில் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இதற்காக சர்வதேச அளவில் #MeToo என்ற பிரச்சாரம் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் பாலிவுட் நடிகைகள் பலர் முக்கிய பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் பாடகி சின்மயி பலர் மீது புகார் கூறி வருகிறார். அவர்களில் வைரமுத்து, ராதாரவி, டி.என். சேஷகோபாலன், பிராமணர் சங்க தலைவர் நாராயணன்

இந்த புகார் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில், இலங்கை சென்ற திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவிடம் செய்தியாளர்கள் வைரமுத்து மீதான சின்மயின் பாலியல் புகார் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு முதலில், “மன்னிக்கவும், என் சம்பந்தமாக, என் சினிமா சம்பந்தமாக என் தொழில் சம்பந்தமாக எது கேட்டாலும், பதில் சொல்கிறேன்”  என்று பாரதிராஜா அமைதியாக பதில் அளித்தார்.

 

ஆனாலும் செய்தியாளர்கள் மீண்டும் #MeToo புகார்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பாரதிராஜா, “மீ டூ என்றால் என்ன? என்ன பிரச்னை? மீ டூ  பற்றி கேள்விப்படுவதற்கெல்லாம் பதில் அளிக்க முடியாது; ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்”  என்று காட்டமாக பதில் அளித்தார்.

மேலும், “நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். என்னிடம் இனி எந்தக் கேள்வியும் கேட்க கூடாது” என ஆங்கிலத்தில் சொல்லி விட்டு புறப்பட்டார்.