கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற தமிழ் சூப்பர் ஸ்டார் யார் தெரியுமா?

மலையாள ஹீரோ திலீப், பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தமிழ் சூப்பர் ஸ்டார் ஒருவர், கொலை வழக்கில் சிக்கி சிற சென்ற சம்பவத்தை நம்மில் பலர் மறந்திருப்போம்.

ஆம்…

தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜபாகவதர். இவரது படங்கள் வருடக்கணக்கில் ஓடின. தனது காந்தர்வக் குரலால் மக்களைக் கட்டிப்போட்டவர்.

மன்மத லீலையை வென்றார் உண்டோ?” என்ற பாடல் பற்பல வருடங்களாகியும் இன்னும் மங்க புகழுடன் இருக்கிறதுஎன்றால் அதற்கு அமுதகுரலால் உயிர் கொடுத்த M.K.தியாகராஜ பாகவதர் தான் காரணம்.

தியாராஜபாகவதரின் சாதனைஇன்னும் யாராலும் முறியடிக்கப்படவில்லை. அவருடைய சாதனைப்படங்களில் ஒன்று ஹரிதாஸ்.25 வாரங்கள்தாண்டி ஓடினாலே பெரிய விசயமாக இருக்கும் இன்றைய சூப்பர் ஸ்டார்களின் படத்துக்கு 110 வாரங்கள் ஓடி 3தீபாவளிகளை கண்ட வரலாற்று சிறப்புமிக்க ஒரே படம் ஹரிதாஸ்.

அந்த காலத்தில் படங்கள் வருவது மிகக்குறைவு.அதனால் ஹரிதாஸ் ஓடியது என்பது சப்பைக்கட்டு. ஹரிதாஸ் வந்த சமயம் தமிழ்சினிமா தவழுவது விட்டு விட்டுநன்றாகவே நடக்க ஆரம்பித்திருந்தது. ஹரிதாஸ் 1944 அக்டோபர் 16 தீபாவளி அன்று ரிலீஸ் ஆனது. அந்த வருடத்தில்வந்த தமிழ் திரைப்படங்களின் எண்ணிக்கை 35. பாகவதருக்கு இது 9 வது படம். அதையும் மீறி 3 வருடங்கள் ஓடியதுஎன்றால் தமிழ் சினிமாவின் அது ஒரு மைல்கல்.

தங்க விக்கிரகம் மாதிரியான பளபளத்த உடம்பு, பட்டு வேட்டி பட்டு சட்டை, நெற்றியில் ஜவ்வாது பொட்டு,காதில்வைரம் பதித்த தோடு, கையில் மிகப்பெரிய தங்க மோதிரம், கணீரென்று பாடும் குரல்வளம் ஆகியவற்றுக்குசொந்தக்காரர் தியாகராஜபாகவதர். “என்னைப் போல் வழ்ந்தவரும் இல்லை, என்னைப் போல் தாழ்ந்தவரும்இல்லை” என்பதுதான் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை சொல்லும் பாடம்.

தந்தை கிருஷ்ணமூர்த்தி ஆசாரியார், தாயார் மணிக்கத்தம்மாளுக்கு 1-3-1910-ம் ஆண்டு பிறந்தவர் தியாகராஜன். பிறந்தஊர் மாயாவரம் (ஒரு சூப்பஸ்டார் அங்கு தோன்றியதாலோ என்னவோ அந்த ஊரில் தற்போதைய சூப்பர் ஸ்டாருக்கு ஏகரசிகர்கள்). தியாகராஜனின் குடும்பம் பிறகு திருச்சி சென்று செட்டில் ஆனவர்கள். பள்ளி படிப்பு மண்டையில் ஏறாமல்துள்ளித் திரிந்தவர் தியாகராஜன். எங்கு சென்றாலும் தன் வசிய குரலில் பாடல்களை பாடி கூட்டம் சேர்த்து விடுவார்தியாகராஜன்.