புதுடெல்லி:

பிரதமர் மோடி முன்னாள் குடியரசு தலைவர் பிரானப் முகர்ஜி மற்றும் பிரதிபா பாட்டீலிடம் கொரோனா தொடர்பான விஷயங்களை தொலைபேசி மூலமாக ஆலோசித்தார்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் மத்திய அரசு மாநில அரசுகள் மற்றும் அதிகாரிகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இன்று பாராளுமன்ற கட்சிகள் தலைவருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோரின் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியுள்ளது.