டில்லி

சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் விற்கப்படும் இரு வாகனங்களில் ஒன்று டீசலாக இருந்தது தற்போது நான்கில் ஒன்று டீசல் வாகனமாக குறைந்துள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு வரை டீசல் வாகனங்களின் மக்களின் விருப்பத்தை மிகவும் கவர்ந்து இருந்தது.   அதற்குக் காரணம் பெட்ரோல் மற்றும் டீசல் இடையில் ஆன விலை வித்தியாசம் ஆகும்.    அத்துடன் டீசல் வாகனங்களில் பொருத்தப்படும் எஞ்சின்கள் அதிக திறன் உடையவை  ஆகும்.   அதனால் பல பெரிய வாகனங்களில் டீசல் எஞ்சின்கள் மாற்றி அமைப்பதும் நடந்து வந்தன.

தற்போது சுற்றுப்புற மாசு குறித்த விழிப்புணர்வு அதிகமாகி வருகிறது.   டீசல் வாகனங்களால் சுற்றுச் சூழல் அதிக அளவில் மாசாவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.    டில்லியில் காற்று மாசு அதிகமாக உள்ளதால் டீசல் வாகனங்களுக்கு நகரில் செல்ல அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.   அத்துடன் சரக்கு வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு அதிக திறன் கொண்ட எஞ்சின்கள் தேவை இல்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது,

நைட்ரஜனை அதிகம் உருவாக்கும் டீசல் வாகனங்களின் ஆயுட்காலமும் குறைவாக உள்ளது.   பெட்ரோல் வாகனங்களின் ஆயுட்காலம் 15 வருடம் என்றால் டீசல் வாகனங்களின் ஆயுட்காலம் 10 வருடம் மட்டுமே என கணக்கிடப் படுகிறது.    மேலும் தற்போது பெட்ரோல் மற்றும் டீசலில் விலைகளுக்கிடையில் அதிக வித்தியாசம் இல்லை.    பெட்ரோல் வாகனங்களில் கிடைக்கும் மைலேஜ் டீசல் வாகனங்களில் கிடைக்காது என்பதால் அந்த வித்தியாசம் அடிபட்டுப் போய் இரண்டும் சமமாக உள்ளது.

இதனால் சொகுசுக் கார்களான டொயோட்டா மற்றும் இன்னோவா வாகனங்களில் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப் பட்டு விற்பனைக்கு வருகின்றன.    இதே போல மெர்சிடிஸ், ஜாகுவார், லாண்ட் ரோவெர் மற்றும் பி எம் டபிள்யூ போன்ற வாகனங்களும் தற்போது டீசல் வாகனங்களை முழுவதுமாக நிறுத்தி விட உத்தேசித்துள்ளன.

டீசல் வாகனங்களை அதிக அளவில் விற்பனை செய்து வரும் மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் தனது வாகனங்களில் சக்தி வாய்ந்த பெட்ரோல் எஞ்சின்களை பொருத்த தொடங்கி உள்ளது.   தற்போது இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள கே யு வி 100 என்னும் வாகனம் 1200 சிசி பெட்ரோல் எஞ்கினுடன் விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.