பெட்ரோல், டீசல் தொடர் விலை உயர்வு: தமிழகத்தில் 1200 மினி பேருந்துகள் சேவை நிறுத்தம்!?

சென்னை:

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் மினி பேருந்துகள் இயக்கம் தற்காலிகமாக  நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் பல கிராமப்பகுதிகளில் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் உயர்வு காரணமாக நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், டீசல் உயர்வு காரணமாக சரக்கு போக்குவரத்து கட்டணத்தை 22 சதவிகிதம் உயர்த்துவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும்… குறிப்பாக கிராப்புறங்களில் இயக்கப்பட்டு வந்த தனியார் மினி பேருந்துகள் சேவையை நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

டீசல் விலையை கட்டுப்படுத்தினால்தான் பேருந்துகளை இயக்க முடியும் என கூறி, தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வந்த சுமாா் 1200 தனியாா் மினி பேருந்துகளின் சேவை முன் அறிவிப்பின்றி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

டீசல் விலை உயா்வால் போதிய லாபம் இன்றி பேருந்தை இயக்க முடியாது என்று பேருந்து உரிமையாளா்கள் தொிவித்துள்ளனா்.  கிராமப்பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த மின் பேருந்து திடீரென இயக்கப்படாததால்… பொதுமக்கள் சொல்லோனா துயரத்துக்கு ஆளாகி உள்ளனர்.

அரசு நடவடிக்கை எடுக்குமா?

You may have missed